கமல்-விஜய்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படம்… உற்சாகத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் வெற்றிப்படங்களை கொடுத்து பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் வெற்றிமாறன் தனது 47வது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளார்.  தனது பிறந்தநாள் தினத்தன்று துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடைகள், உணவுகள் போன்றவற்றை வழங்கி பலரது ஆசீர்வாதங்களை பெற்றிருக்கிறார்.  மேலும் இவரது பிறந்தநாளுக்கு பல திரை பிரபலங்களும், ரசிகர்களும்  வாழ்ந்து தெரிவித்துள்ளனர்.  தற்போது வெற்றிமாறன் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து விடுதலை படத்தை இயக்கியுள்ளார், இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது.  இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவிருக்கிறார்.

தற்போது லேட்டஸ்டாக வெளியாகியுள்ள தகவலின்படி, வெற்றிமாறன் தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கப்போவதாகவும், அந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  இப்படியொரு வலுவான கூட்டணி இணையப்போவதாக வெளியாகியுள்ள செய்திகள் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  இருப்பினும் இந்த மூவரின் கூட்டணி இணைவது குறித்த எவ்வித அதிகாரபூர்வ தகவலும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, அதேசமயம் இந்த செய்தி கிட்டத்தட்ட நம்பக்கூடிய வகையிலும் அமைந்திருக்கிறது.  ஏனெனில் சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் வெற்றிமாறன் அளித்திருந்த பேட்டியொன்றில் விஜய் மற்றும் கமல் இருவரையும் வைத்து படம் இயக்க விரும்புவதாகவும், அதற்கான கதையை தயார் செய்து வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக தற்போது இந்த மூன்று பிரபலங்கள் இணைவதாக வெளியாகியுள்ள செய்தி உண்மையாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மற்றும் உதயநிதி ஸ்டாலின் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தை தயாரிக்கிறது, மேலும் இந்நிறுவனத்தின் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் நடிப்பார்கள் என்றும் சில செய்திகள் வெளியாகியுள்ளது.  கமல்-விஜய்-வெற்றிமாறன் கூட்டணியில் படம் உருவாவதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், படத்தின் பேச்சுவார்தை ஆரம்பகட்டத்தில் இருப்பதால் இறுதிசெய்யப்பட்ட பின் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.