அரக்கோணம் அருகே தடுப்பணையில் குளிக்கச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியைச் சேர்ந்த ஜவ்ளக் என்பவரின் குடும்ப நிகழ்ச்சிக்காக வந்திருந்த உறவினர்கள் அனைவரும் நிகழ்ச்சி முடிந்தவுடன் தடுப்பணைக்கு குளிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில் கால் தவறி தடுப்பணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து தவறி விழுந்துள்ளனர்.
தவறி நீரில் விழுந்தவர்களில் நான்கு பேரை பாதுகாப்பாக மீட்ட நிலையில், மீதமிருந்த 3 பெண்கள் நீரில் மூழ்கினர். இதையடுத்து தண்ணீரில் மூழ்கிய மூன்று பெண்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூவரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
புரசைவாக்கத்தை சேர்ந்த ரசூல் (24), ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பரிதாபானு மற்றும் தக்கோலம் பகுதியைச் சேர்ந்த பவுசியா (13) ஆகிய மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: விநாயகர் ஊர்வலம் பார்க்க வந்தவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்: நத்தம் அருகே நடந்த சோகம்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM