கொள்ளிடம் ஆற்றில் 45 நாட்களில் 3-வது முறையாக வெள்ளப்பெருக்கு: கரையோரம் இருந்த வீடு அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் பெய்த மழையால் ஏரி நிரம்பி நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததுள்ளது. குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளான ஓலைப்பாளையம், தட்டான்குட்டை, கத்தேரி உள்ளிட்ட பகுதிகளில்  நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் ஓலைப்பாளையம் ஏரி நிரம்பியது. ஏரியிலிருந்து உபரி நீர் வழிந்தோடும் நிலையில் அந்த ஆக்கிரமிப்பு கட்டப்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில் அங்கு மழைநீரை அகற்றும் பணியை நகராட்சி மற்றும் வருவாய்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதைப்போல் கத்தேரி ஏரி நிரம்பிய நிலையில் கோம்புபள்ளம் ஓடையில் நீர்வத்து அதிகரித்துள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோம்புபள்ளம் ஓடையில் இருந்து வெளியேறும் தண்ணீர் அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் வளாகத்திகுள் புகுந்தது. இதனால் மாணவிகளின் பாதுகாப்பு கருதி  அந்த பள்ளிக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் ஒரு பகுதியில் வெள்ள நீர் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த 45 நாட்களில் 3-வது முறையாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பருத்தி, கிழங்கு, கத்தரிக்காய் உள்ளிட்ட செடிகள் முற்றிலும் அழுகின. மேலும் அங்கு சூழ்ந்து வந்துள்ள செங்கல் சுளைகளும் பணியும் தடைப்பட்டன. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கரையோரம் அரிப்பு ஏற்ப்பட்டு நாதல்படுகை கிராமத்தில் உள்ள வீடு அடித்துச் செல்லப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் பகுதியில் பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதியாறு ஆகியவை சங்கமிக்கின்றன. இங்கு 10 மாதங்களாக தண்ணீர் வற்றாமல் உள்ளதால் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் 15 கிராமத்தில் உள்ள விவசாயிகள் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. சென்னை தாம்பரம், பல்லாவரம் பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த பழையசீவரம் ஆறு விளங்கி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.