கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை

தற்போதைய சூழ்நிலையில் கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எனவே கோதுமை மாவை முன்னைய விலைக்கே விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர், கூடுதலான விலைக்கு விற்பனைசெய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தரப்பினருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்

ஜாஎலயிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், இரண்டு கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய கலந்துரையாடலில்,

ஒரு மாதத்திற்கு தேவையான கோதுமை மா தங்களிடம் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், துருக்கி மற்றும் டுபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையும் என்று இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே எதிர்காலத்தில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. இறக்குமதி செய்யப்பட்ட கோதுமைக்கு, உற்பத்தி செலவு மற்றும் மேலதிக செலவுகள் அதிகரிக்காத பட்சத்தில், கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதை காரணம் காட்டி அதன் விலையை அதிகரிக்க முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்துடன் இன்று (5) கலந்துரையாடலை மேற்கொள்வதாக கூறிய அமைச்சர், பாண் விலை தொடர்பில் தற்போதைக்கு தீர்மானம் எடுக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.