சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம்

வேலூர்: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா ஆகாரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி கலைச்செல்வி(43).கடந்த 1ம் தேதி பைக் மோதி காயமடைந்த கலைச்செல்விக்கு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அன்றிரவே, மூளைச்சாவு ஏற்பட்டது. குடும்பத்தினர், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர். இதையடுத்து 2 கண்கள், 2 சிறுநீரகம், கல்லீரல், இதயம் ஆகியவற்றை  தானமாக பெற்று சென்னை காவேரி மருத்துவமனை, ராமச்சந்திரா மருத்துவமனை, பிரசாந்த் மருத்துவமனை, வேலூர் தனியார் மருத்துவமனை ஆகியவற்றுக்கு ஆம்புலன்ஸ்களில் அனுப்பி ைவத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.