சிம்பிளான 5 ஓணம் ரெசிபிகள்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

கேரளாவின் பிரமாண்ட பண்டிகையான ஓணம் இதோ கூப்பிடு தொலைவில் வந்துவிட்டது(செப்டம்பர் 08). தான தர்மத்தில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்ற கர்வத்தில் இருந்த மன்னர் மகாபலியை இறைவன் வாமன அவதாரம் எடுத்து தடுத்தாட்கொண்ட கதைநமக்குத் தெரியும்.அந்த மகாபலியின் நினைவாக கொண்டாடப்படும் பண்டிகை தான் ‘ஓணம்.’

பாயசம்

கேரளத்தின் அனைத்து இல்லங்களிலும் இனிப்பு பண்டங்கள் அமர்க்களப்படும். உங்கள் இல்லத்தில் செய்ய சில இனிப்பு ரெஸிபிகள்.

1.நெய்ப்பாயசம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1/2 ஆழாக்கு

பொடித்த வெல்லம் – 2 டம்ளர்

நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை – தேவையான அளவு

பல்லு பல்லாக கீறிய தேங்காய் – துண்டங்கள் சிறிதளவு.

நெய் – 100 கிராம்.

செய்முறை

*பச்சரிசியை நன்கு குழைய வேக வைத்து கொள்ளவும். அடிகனமான வாணலியில் வெல்லத்துடன் 1/2 டம்ளர் நீர் சேர்த்து பாகு காய்ச்சவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.

வடிகட்டிய வெல்லக் கரைசலில் வடித்து வைத்த சாதத்தைக் கொட்டிக் நன்கு கிளறவும். நெய்யைச் சேர்க்கவும். நன்கு கொதிக்கவிடவும். செமிஸாலிடாக நெய்ப்பாயசம் திரண்டு வருகையில். அதில் நெய்யில் வறுத்து எடுத்த தேங்காய் துண்டுகள்+முந்திரி+திராட்சை சேர்த்து இறக்க கமகம மணத்துடன் ‘நெய்ப்பாயசம்’ரெடி.

2.நெய்யப்பம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 ஆழாக்கு

பொடித்தவெல்லம் – 3/4ஆழாக்கு

தேங்காய்த்துருவல் – 1டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் தூள் – 1சிட்டிகை

செய்முறை

அரிசியை குறைந்தது 2 மணிநேரம் ஊறவிட்டு நன்கு கழுவி அதனுடன் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதில் தேங்காய் துருவல்+ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் நெய்யை சற்று தாராளமாக ஊற்றி காய்ந்ததும் (புகை வரக்கூடாது)அதில் வெல்லமாவைச்சேர்த்து வேக விடவும். ஒருபுறத்தில் நன்கு வெந்தவுடன் கம்பியால் குத்தி அடுத்த பக்கமாக நெய் அப்பத்தை திருப்பவும்.

பொன்னிறமான நெய்யப்பம் நைவேத்தியத்திற்கு ரெடி.

பாயாசம்

3.பாலாடை பிரதமன்

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 ஆழாக்கு

பால் – 2 டம்ளர்

சர்க்கரை – 1 1/2டம்ளர்

குங்குமப்பூ – சிறிதளவு.

செய்முறை

பச்சரிசியை குறைந்தது 2 மணிநேரம் ஊறவிட்டு நன்கு கழுவி மிக்ஸியில் நைஸாக அரைத்து கொள்ளவும். இந்த மாவை வாழையிலையில் அடை மாதிரி தடிமனாக பார்த்துக் கொள்ளவும். அடுப்பில் இட்லி பானை வைத்து, இட்லி தட்டு மீது இந்த வாழையிலை அடையை வைக்கவும். சில நிமிடங்களிலேயே அடை நன்கு வெந்து…. இலையிலிருந்து உரித்தாள் கையோடு வந்து விடும். இப்போது இந்த அடையைச் சின்னச்சின்ன துண்டங்களாக ஒரே மாதிரி கட் செய்து வைத்து கொள்ளவும்.

பாலை அடுப்பில் வைத்து நன்கு சுண்டக் காய்ச்சி பாதியாக சுண்டவிடவும்.

சுண்டக் காய்ச்சிய பாலில் ஒரே மாதிரி கட் செய்து வைத்து உள்ள அடைத்துண்டங்களை சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும். (அடிப்பிடிக்காமல் பார்த்து கிளறுவது அவசியம்). அடைத் துண்டுகளில் பாலின் ருசி இறங்க இறங்க பாலில் ஊறிய அடை சற்று தடிமனாகக் தெரியும். இப்போது சர்க்கரை சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். சர்க்கரை நன்கு கரைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி குங்குமப்பூ தூவ… சுவையான ‘பாலாடை பிரதமன்’ ரெடி.

அவியல்

4.அவியல்

தேவையான பொருட்கள்

பூசணிக்காய், சவ்சவ், சேனை, வாழை, பீன்ஸ், கேரட், உருளை பரங்கிக்காய், புடவை, முருங்கை… இப்படி எந்த காய்கறிகளிலும் அவியல் செய்யலாம். ஐந்தாறு காய்கறிகளை சற்று நீளமாக நறுக்கி 4 டம்ளர் அளவுக்கு எடுத்து கொள்ளவும்.

தேங்காய் 1(துருவிக்கொள்ளவும்)

பச்சை மிளகாய் – 6

வாசமான கெட்டித் தயிர் – 1டம்ளர்

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

தேங்காய் எண்ணெய் – கொஞ்சம்

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

காய்கறிகளுடன் சிட்டிகை மஞ்சள் தூள் தேவையான உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வேக விடவும்.தேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாய்+கெட்டித்தயிர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். அடிகனமான வாணலியில் அடுப்பில் வைத்து வேக வைத்த காய்கறிகள்+தேங்காய் தயிர் கலவையை சேர்த்து நன்கு கலக்கவும். (தண்ணீர் தேவை இருப்பின் சிறிதளவு அதையும் சேர்த்து கொள்ளவும்)

ஒரு கொதி வந்தவுடன் கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் முக்கி எடுத்து அவியலில் போடவும். சிறிதளவு தேங்காய் எண்ணெயை அப்படியே ஊற்ற பச்சை, சிவப்பு, மஞ்சள்…. இப்படி வானவில் போல வண்ண மயமான கலக்கல்’அவியல்’தயார்.

5.காரசாரமான எரிசேரி

தேவையான பொருட்கள்

நேந்திரங்காய் – 1

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்

தேங்காய் – 1/2மூடி(துருவிக்கொள்ளவும்)

மிளகு – 1டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

தாளிக்க : கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் – 2

நேந்திரம்

செய்முறை

நேந்திரங்காயை தோல் சீவி சின்னச்சின்ன சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் சிறிது மஞ்சள் தூள்+மிளகாய் தூள்+தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து அடுப்பில் வேகவிடவும்.

துருவிய தேங்காய் துருவி சரிபாதியை எடுத்து 1டீஸ்பூன் மிளகு சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாகச் சட்னிக்கு அரைப்பது போல மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். அடிகனமான வாணலியில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாய் தாளித்து மீதமுள்ள தேங்காய் துருவல் போட்டு நன்கு வறுக்கவும். பொன்னிறமானதும் வேகவைத்த காய்கறிகள்+அரைத்து வைத்துள்ள தேங்காய் மிளகு கலவை அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கி சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்க… காரமான, மணமான ‘எரிசேரி’தயார். இப்படி எல்லா ரெஸிப்பிகளையும் செய்து ஓணத்தை சிறப்பாக கொண்டாடுவோம்

என்றென்றும் அன்புடன

ஆதிரைவேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.