செல்ஃபி எடுப்பது என்றாலே பலருக்கும் பிடிக்கும், அது நம்முடைய நல்ல நினைவுகளை பத்திரப்படுத்தி வைக்கும் ஒன்றாக இருப்பதால் பலரும் தாங்கள் செல்லும் முக்கியமான இடங்களில் செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர். அதிலும் திரையில் கண்டு ரசிக்கும் பிரபலங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்போது அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள தான் ரசிகர்கள் பலரும் விரும்புவார்கள். ஆனால் சமீப காலமாக ரசிகர்கள் திரை பிரபலங்களுடன் சேர்த்து செல்ஃபி எடுத்துக்கொள்ள முயல்வதும், அதனை பிரபலங்கள் நிராகரிப்பதும் என தொடர்கதையான ஒன்றாக நடந்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு நடிகர் சிவகுமார் ஒரு திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அங்கு குழுமியிருந்த ரசிகர்களில் ஒருவர் அவர் அருகில் வந்து செல்ஃபி எடுக்க முயலும்போது அவர் உடனே அந்த நபரின் கையிலிருந்த செல்போனை தட்டிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகரின் செயலை இணையாவசிகள் பலரும் விமர்சித்து வந்தனர், அதன் பின்னர் செல்போனை பறிகொடுத்த நபருக்கு புதிதாக செல்போனும் வாங்கி கொடுத்த சம்பவமும் அரங்கேறியது. அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு தேர்தல் சமயத்தில் நடிகர் அஜித் வாக்குச்சாவடிக்கு அவரது வாக்கை செலுத்த வந்திருந்த பொழுது, ரசிகர் முந்தியடித்துக்கொண்டு செல்ஃபி எடுக்க முயன்றபோது, நடிகர் அஜித் உடனே அந்த நபரின் செல்போனை சட்டென்று பிடுங்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இந்த வரிசையில் நடிகர் சித்தார்த்தும் இணைந்து இருக்கிறார்.
சித்தார்த் தனது ரசிகரின் செல்போனை பிடுங்கிய வீடியோ இணையத்தில் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் சித்தார்த் மற்றும் அவருடன் சிலர் சேர்ந்து ஒரு லிஃப்டில் ஏறுகின்றனர், அப்போது அவரது ரசிகர் ஒருவர் அவர் அருகில் வந்து செல்ஃபி எடுக்க முயல்கிறார். உடனே அவர் கையிலிருந்த செல்போனை சித்தார்த் பிடுங்கி வைத்துக்கொள்கிறார், இந்த சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. சமீபத்தில் தமிழக அரசின் திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினை பெற்ற நடிகர் செய்யும் செயலா இது என்று சிலரும், நடிகர்களும் சாதாரண மனிதர்கள் தான் பொதுவெளியில் செல்லும்பொழுது அவர்களை ரசிகர்கள் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் என்று சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#செல்ஃபியா…. போனை பிடிங்கிய #நடிகர்சித்தார்த் @kalilulla_it @abm_tn @The_Abinesh @me_dineshudhay @Journalist_guna @rajakumaari @Munaf_SMM @bhuvanasekar @ZeeTamilNews pic.twitter.com/1zCKuy5FpM
— Nowshath A (@Nousa_journo) September 5, 2022