சைரஸ் மிஸ்திரி மரணத்திற்கு பின் ஷபூர்ஜி பல்லோன்ஜி குரூப் எதிர்காலம் என்ன..?

டாடா குழும நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா டிரஸ்ட் 66 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நிலையில், இதற்கு அடுத்தப் படியாக சைரஸ் மிஸ்திரி-யின் குடும்பம் சுமார் 18.4 சதவீத பங்குகளை வைத்துள்ளது.

ஷபூர்ஜி பலோன்ஜி குரூப்-ன் உரிமையாளரான பலோன்ஜி மிஸ்திரி சில மாதங்களுக்கு முன்பே உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், சைரஸ் மிஸ்திரி தான் எதிர்காலம் என நம்பியிருந்த நிலையில் குஜராத்தில் இருந்து மும்பை திரும்பிக் கொண்டிருந்த சைரஸ் மிஸ்திரி-யின் கார் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார்.

இவருடைய உயிரிழப்புக்கு அவர் சீட் பெல்ட் போடாததும், 9 நிமிடத்தில் 20 கிலோமீட்டர் கடக்கும் வேகத்தில் சென்றதது தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஷபூர்ஜி பலோன்ஜி குரூப்-ன் எதிர்காலம் தான் தற்போது அனைவரின் முக்கியக் கேள்வியாக உள்ளது.

சைரஸ் மிஸ்திரி மரணம்.. டாடா சன்ஸ் – ஷாபூர்ஜி பலோன்ஜி குரூப் பிரச்சனைகளுக்கு முடிவா..?

 பலோன்ஜி மிஸ்திரி

பலோன்ஜி மிஸ்திரி

ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் தலைவரும், நாட்டின் முக்கியப் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவரான பலோன்ஜி மிஸ்திரி தனது மும்பை வீட்டில் 93வது வயதில் ஜூன் 28 ஆம் தேதி மறைந்தார். பலோன்ஜி மிஸ்திரி மறைந்து 100 நாட்களே ஆகாத நிலையில் இவருடைய வர்த்தக வாரிசான சைரஸ் மிஸ்திரி மறைந்தார்.

ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம்

ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம்

ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம் இன்ஜினியரிங் மற்றும் கட்டுமானம், இன்பராஸ்டக்சர், ரியல் எஸ்டேட், தண்ணீர், எனர்ஜி மற்றும் நிதியியல் சேவை எனப் பல துறையில் இயங்கி வருகிறது. ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் மாபெரும் வளர்ச்சிக்கு முதலும் முக்கியக் காரணம் பலோன்ஜி மிஸ்திரி தான்.

4 பிள்ளைகள்
 

4 பிள்ளைகள்

பலோன்ஜி மிஸ்திரி-க்கு 4 பிள்ளைகள் இதில் 2 பெண் பிள்ளைகள், 2 ஆண் பிள்ளைகள். இதில் மூத்தவர் ஷாப்பூர் மிஸ்திரி, அதன் பின்பு சைரஸ் மிஸ்திரி , ஆலு மிஸ்திரி, லைலா மிஸ்திரி. வர்த்தகத் துறையில்

ஷாபூர் மிஸ்திரி

ஷாபூர் மிஸ்திரி

சைரஸின் மூத்த சகோதரரான ஷாபூர் மிஸ்திரி, அவரது இளைய சகோதரரைப் போலப் போராடும் குணம் உடையவர் அல்ல.. இதனால் டாடா குழுமம் உடனான பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோயல் டாடா

நோயல் டாடா

இதேபோல் ரத்தன் டாடா-வின் சகோதரரான நோயல் டாடா, சைரஸ் மிஸ்திரி-யின் சகோதரி ஆலு அவர்களைத் திருமணம் செய்துள்ளார். டாடா சன்ஸ் – ஷபூர்ஜி பலோன்ஜி குரூப் மத்தியில் வர்த்தகம் தாண்டி குடும்ப அளவிலும் நெருக்கம் அதிகமாக உள்ளது.

1 பில்லியன் டாலர் கடன்

1 பில்லியன் டாலர் கடன்

இதையும் தாண்டி தான் சைரஸ் மிஸ்திரி டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நடத்து வருவதற்கு மத்தியில் ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம் நதி சிக்கலில் மாட்டிக்கொண்ட நிலையில் டாடா சன்ஸ் பங்குகளை அடைமானம் வைத்து 1 பில்லியன் டாலர் கடன் பெற சைரஸ் மிஸ்திரி முயற்சி செய்தார், ரத்தன் டாடா வழக்கு தொடுத்து அதைத் தடுத்தார்.

சைரஸ் மிஸ்திரி

சைரஸ் மிஸ்திரி

இதைத் தொடர்ந்து வேறு வழி இல்லாமல் பல்வேறு வர்த்தகம் மற்றும் சொத்துக்களை விற்பனை செய்து கடன் அளவுகளைக் குறைந்து வருகிறது. இந்த நிலையில் சைரஸ் மிஸ்திரி-யின் மரணம் ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What is the future of Shapoorji Pallonji Group after cyrus mistry death

What is the future of Shapoorji Pallonji Group after cyrus mistry death சைரஸ் மிஸ்திரி மரணத்திற்குப் பின் ஷபூர்ஜி பல்லோன்ஜி குரூப் எதிர்காலம் என்ன..?

Story first published: Monday, September 5, 2022, 13:08 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.