தங்கம் விற்பனை அமோகம்.. தீபாவளி-க்கு முன்பே இப்படியா..?

ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை 4 சதவீதம் வீழ்ச்சியடைந்து 10 கிராமுக்கு ₹50,400 ஆக இருந்தது இதன் மூலம் இந்தியாவில் பண்டிகைக் காலத்துக்கு முன்னதாகத் தங்கத்தின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

மலபார் கோல்ட் & டயமண்ட்ஸ், சென்கோ கோல்டு & டயமண்ட்ஸ் மற்றும் ஜோய் அலுக்காஸ் போன்ற முன்னணி தங்க நகை சில்லறை விற்பனையாளர்கள் ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கடைகளுக்கு எதிர்கொண்டு உள்ளனர்.

மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்திப் பண்டிகையையொட்டி தங்கம் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், சராசரி கொள்முதல் அளவு 20 கிராம் வரை உயர்ந்து இருமடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஆறு வார சரிவில் தங்கம் விலை.. இனி குறையுமா ஏறுமா.. இது வாங்க சரியான இடமா?

அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்

அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்

உலகளவில் பலவீனமான வர்த்தகம், பணவீக்கம், முதலீடுகள் ஆகியவற்றால் இந்தியாவில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலின் அறிக்கைக்கு, மத்திய வங்கி அதன் நாணய கொள்கை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடரும் என்று அறிவித்த நிலையில் முதலீட்டுச் சந்தையில் முக்கிய மாற்றங்களை எதிர்கொண்டு உள்ளது.

பண்டிகைக் காலம்

பண்டிகைக் காலம்

பண்டிகைக் காலத்துக்கு முன்னதாகத் தங்கத்தின் விலை குறைந்தது மூலம் வர்த்தகச் சந்தையில் தங்கத்தின் தேவையை அதிகரித்து உள்ளது. ஏனெனில் தங்க நகைகளை வாங்குவோர் மத்தியில் விலை சரிவு வாங்குவதற்கான வாய்ப்புகளைப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்று கேரளாவைச் சேர்ந்த மலபார் கோல்டு & டயமண்ட்ஸ் தலைவர் எம்.பி. அகமது கூறினார்.

பொருளாதாரம்
 

பொருளாதாரம்

பொருளாதாரம் மறுமலர்ச்சியில் இருப்பதால், வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்கக் கடைகளுக்கு அதிகளவில் செல்ல துவங்கியுள்ளனர். தொற்றுநோய்க்குப் பிறகு ஒரு முழு அளவிலான பண்டிகை மற்றும் திருமணச் சீசனுக்கான சிறந்த வர்த்தகத் தொடக்கத்திற்கான களத்தில் தங்கத்தின் விலை குறைந்திருப்பது எவ்வளவு பெரிய விஷயம்.

 மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்திப் பண்டிகையையொட்டி தங்கம் கொள்முதல் சூடுபிடித்துள்ளது. இதேபோல் தங்கம் விலை குறைந்த இதேவேளையில் பருவமழை சிறப்பாக இருந்து மகசூல்-ம் சிறப்பாக இருந்த காரணத்தால் இம்மாநிலத்தில் ஊரகப் பகுதிகளிலும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

தங்கம் மீதான இறக்குமதி வரி

தங்கம் மீதான இறக்குமதி வரி

இதேவேளையில் மத்திய அரசு தங்கம் மீதான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தாமல் இருந்திருந்தால் தங்க நகை விலை மேலும் குறைந்திருக்கும், விற்பனையும் அதிகரித்திருக்கும் எனக் கோவை நகை உற்பத்தியாளர் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Gold jewellery sales peaks in Maharashtra during Vinayak Chaturthi; Good news before festive season

Gold jewellery sales peaks in Maharashtra during Vinayak Chaturthi; Good news before festive season தங்கம் விற்பனை அமோகம்.. தீபாவளிக்கு முன்பே இப்படியா..?

Story first published: Monday, September 5, 2022, 15:14 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.