திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே பைக் மீது அரசுப்பேருந்து மோதியதில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்தார். படுகாயமடைந்த கணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் ஓட்டுநர் முத்துமாணிக்கத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
