புதுடில்லி: ஜனாதிபதி மாளிகையில், தேசிய நல்லாசிரியர்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் 45 பேருக்கு விருதுகளை வழங்கி, ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டினார். ஆசிரியர் தினத்தன்று, சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான விருதுக்காக, இணையதளம் வாயிலாக நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகள் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, இமாச்சல் பிரதேசம் உள்பட நாடு முழுவதிலுமிருந்து 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, இன்று(செப்.,05) ஜனாதிபதி மாளிகையில், தேசிய நல்லாசிரியர்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை, ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி, பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
புதுடில்லி: ஜனாதிபதி மாளிகையில், தேசிய நல்லாசிரியர்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் 45 பேருக்கு விருதுகளை வழங்கி, ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டினார்.ஆசிரியர் தினத்தன்று, சிறந்த
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்