நெட்பிளிக்ஸில் வெளியான நேஷனல் பார்க் தொடரை தொகுத்து வழங்கிய ஒபாமாவுக்கு எம்மி விருது

லாஸ் ஏஞ்சல்ஸ்: நெட்பிளிக்ஸில் வெளியான நேஷனல் பார்க் தொடரை சிறப்பாக தொகுத்து வழங்கியதற்காக, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு எம்மி விருது வழங்கப்பட்டது.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும், அவரது மனைவிமிஷேல் ஒபாமாவும் ‘ஹையர் கிரவுண்ட்’என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்துகின்றனர். இந்த நிறுவனம் சார்பில் ‘அவர் கிரேட் நேஷனல் பார்க்ஸ்’ என்ற தலைப்பில் ஆவணப் படம் ஒன்று எடுக்கப்பட்டது. இதில் உலகம் முழுவதும் உள்ள தேசிய பூங்காங்களின் சிறப்பம்சங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. இந்த தொடரை ஒபாமாவே தொகுத்து வழங்கியுள்ளார். மொத்தம் 5 பாகங்களாக இந்த தொடர் தயாரிக்கப்பட்டது. இந்த தொடர் நெட்பிளிக்ஸில் கடந்த ஏப்ரலில் வெளியானது.

இந்நிலையில் சிறந்த தொகுப் பாளருக்கான எம்மி விருது ஒபாமாவுக்கு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. எம்மி விருது பெறும் 2-வது அமெரிக்க அதிபர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க முன்னாள் அதிபர் டிவைட் டி.எய்சன்ஹோவர் கடந்த 1956-ம் ஆண்டு சிறப்பு எம்மி விருதை பெற்றார்.

பராக் ஒபாமா தனது 2 ஆடியோவை தொகுத்து வழங்கியதற்காக ஏற்கெனவே கிராமி விருதுகளை பெற்றுள்ளார். மிஷேல் ஒபாமாவும், தனது ஆடியோ புத்தகத்தை வாசித்ததற்காக கடந்த 2020-ல் கிராமி விருது வென்றார்.

எம்மி, கிராமி விருதுகளை பெற்றுள்ள ஒபாமா, ஆஸ்கர் மற்றும் டோனி என்ற மேலும் இரு விருதுகளை பெற்றுவிட்டால், ‘இகாட்’(EGOT) விருதுகளை பெற்றவர்கள்வரிசையில் இணைந்து விடுவார்.இந்த இகாட் விருதுகளை, தற்போதுவரை 17 பேர் மட்டுமே பெற்றுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.