ஐதராபாத்: பாகுபலி படத்தின் வெற்றியால் பான் இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார் பிரபாஸ்.
அவரது நடிப்பில் இறுதியாக வெளியான ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் மிகப் பெரிய தோல்வியடைந்தது.
இந்நிலையில், பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக சிறப்பான அப்டேட் வெளியாகியுள்ளது.
பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ்
டோலிவுட் ரசிகர்களின் டார்லிங் என்ற சிறப்புப் பெயர் நடிகர் பிரபாஸுக்கு உண்டு. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருந்த ‘பாகுபலி’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றதையடுத்து, பான் இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார். பிரபாஸின் படங்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஆனாலும், பாகுபலிக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’, ‘ராதே ஷ்யாம்’ படங்கள் எதிர்பார்த்தை வெற்றியை பெறவில்லை.

எதிர்பார்ப்பில் பிரபாஸின் சாலார்
இந்நிலையில், பிரபாஸின் நடிப்பில் அடுத்தடுத்து 3 பிரம்மாண்டமான படங்கள் வெளியாகவுள்ளன. கேஜிஎஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சாலார், அடுத்தாண்டு செப்டம்பரில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதேபோல், பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகிறது. இந்த இரண்டு திரைப்படங்களும் பிரபாஸுக்கு சிறப்பான கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ‘பிராஜக்ட் கே’ படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார்.

பிரபாஸுடன் இணையும் சூர்யா
‘ப்ராஜக்ட் கே’ சயின்ஸ் பிக்சன் ஜானரில் அட்வென்சர்ஸ் திரைப்படமாக உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. தெலுங்கு முன்னணி இயக்குநர் நாக் அஸ்வின் இந்தப் படத்தை இயக்குகிறார். பிரபாஸ்க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேபோல், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், திஷா பதானி இருவரும் கமிட் ஆகியுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், தற்போது சூர்யாவையும் நடிக்க வைக்க, ப்ராஜக்ட் கே படக்குழு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகேஷ்பாபு, துல்கர் சல்மான்
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் ப்ராஜக் கே-வில், சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, மலையாள டாப் ஸ்டார் துல்கர் சல்மான் ஆகியோரையும் பிரபாஸுடன் நடிக்கை வைக்க படக்குழு முயற்சித்து வருகிறது. இந்தத் தகவல் சூர்யா ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.