பாஜக ஆட்சியில் கோபமும் வெறுப்புணர்வும் அதிகரிப்பு: காங். மூத்த தலைவர் ராகுல் விமர்சனம்

புதுடெல்லி: டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பேரணியில் பங்கேற்ற மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது.

பாஜக- சங் பரிவார் தலைவர்கள் நாட்டை பிளவுபடுத்துவதிலேயே குறியாக உள்ளனர். இதனால், பயம், வெறுப்புணர்வுமே நாட்டில் அதிகரித்துள்ளது. நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசு வதையும், அவற்றின் கருத்துகளை அறிந்து கொள்வதையும் மத்திய அரசு விரும்புவதில்லை.

இந்த நிலையில், மக்களிடம் நேரடியாக சென்று எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்பதுதான் ஒரே வழியாக உள்ளது. உண்மையை நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களின் கருத்தை அறிந்து கொள்ள காங்கிரஸ் விரும்புகிறது. அந்த வகையில்தான், கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரையிலான பாத யாத்திரையை காங்கிரஸ் கட்சி தொடங்கவுள்ளது. இது, மக்களை நேரடியாக சென்று சந்தித்து அவர்களின் பிரச்சினை குறித்து கேட்டறிய மிகவும் உதவியாக இருக்கும்.

பிரதமர் மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவை பயத்தை யும் வெறுப்பையும் பரப்பி நாட்டை பலவீனமாக்கி வருகின்றன. இதனால், பணவீக்கமும்,வேலை வாய்ப்பின்மையும் நாட்டில் அதி கரித்துள்ளது. இது, இந்தியாவுக்கு எந்த பயனையும் தராது. ஆனால், சீனா, பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையும்.

மேலும், பாஜக ஆட்சியில் ஊடகம், நீதித் துறை, தேர்தல் ஆணையம் என அனைத்து முக்கிய ஜனநாயக அமைப்புகளும் பெரும் அழுத்தத்தில் உள்ளன. இவற்றில் மத்திய அரசின் தலையீடு மிக அதிக அளவில் காணப்படுகிறது.

மத்திய பாஜக அரசின் வெறுப்புணர்வு செயல்பாட்டால் இரண்டு தொழிலதிபர்கள் மட்டுமே பயனடைந்து வருகின்றனர். அதற்காக மட்டுமே, பாஜக பணியாற்றி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்..

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.