லண்டன்: பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக உள்ளவரே, பிரதமர் பதவியை வகிக்க முடியும். இதன்படி, கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங்களாக நடந்து வந்தது.
இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் இடையே போட்டி நிலவுயது. தலைவர் பதவிக்கான தேர்தலின் கடைசி கட்டத்தில், கட்சி உறுப்பினர்கள், 1.60 லட்சம் பேர் ஓட்டளித்தனர். இதற்கான ஓட்டுப் பதிவு கடந்த 2ம் தேதி நடந்தது.
இந்த தேர்தலில், லிஸ் டிரஸ் வெற்றி பெற்று புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். 47 வயதாகும் லிஸ் டிரஸ், பிரிட்டனின் 3வது பெண் பிரதமர் ஆவார்.
லண்டன்: பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார். ஆளும் பழமைவாத கட்சியின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்