பிரித்தானியாவில் எதிர்காலத்தை தீர்மானிக்க திணறும் இலங்கை இளம்பெண்: அகதிகளை கைவிடும் பிரித்தானிய கல்விமுறை


பிரித்தானிய கல்விமுறை அகதிகளுக்கும், புகலிடம் கோருபவர்களின் பிள்ளைகளுக்கும் ஆதரவளிக்கத் தவறிவருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, அடுத்த கல்வியாண்டில் இணைவதற்காக இந்த மாணவர்கள் நீண்ட காலம் காத்திருக்கவேண்டியுள்ளது.

பிரித்தானிய கல்விமுறை, உயர் கல்வி கற்க விரும்பும் அகதிகளுக்கும், புகலிடம் கோருபவர்களின் பிள்ளைகளுக்கும் ஆதரவளிக்கத் தவறிவருவதாக தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

தங்களிடம் ஒன்லைன் வாயிலாக கல்வி தொடர்பில் உதவி கோரி வரும் அகதிகள் மற்றும் புகலிடம் கோரும் இளைஞர்களின் எண்ணிக்கை சமீபத்தைய சில ஆண்டுகளாகவே குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கிறது Refugee Education UK என்னும் அந்த அமைப்பு.

மொழிப்பிரச்சினை, உயர் கல்வியில் இணைய சிக்கலான நடைமுறைகள் மற்றும் புகலிடக் கோரிக்கைகள் குறித்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு போதுமான விழிப்புணர்வின்மை ஆகிய பிரச்சினைகள் காரணமாக, அடுத்த கல்வியாண்டில் இணைவதற்காக மாணவர்கள் நீண்ட காலம் காத்திருக்கவேண்டியிருப்பதாக தெரிவிக்கிறது அந்த தொண்டு நிறுவனம்.

பிரித்தானியாவில் எதிர்காலத்தை தீர்மானிக்க திணறும் இலங்கை இளம்பெண்: அகதிகளை கைவிடும் பிரித்தானிய கல்விமுறை | A British Education System That Abandons Refugees

image – news.sky  

இலங்கையிலிருந்து பிரித்தானியா வந்துள்ள கோபிகா (24), GCSE ஆங்கிலத் தேர்வில் வெற்றிபெறவேண்டியிருப்பதால் பல்கலைக்கழகத்தில் இணைவதற்கு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

கோபிகா ஏற்கனவே இலங்கையில் GCSE தேர்வில் வெற்றிபெற்றுவிட்டார். ஆனால், அவர் பிரித்தானியாவுக்கு வந்த பின்னர் மீண்டும் அத்தேர்வை எழுதி வெற்றிபெறவேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆகவே, GCSE ஆங்கிலத் தேர்வை எழுத இருக்கிறார் கோபிகா. ஆனால், அதற்குள் ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன.

என் வயதுடையவர்கள் நல்ல நல்ல பணிகளில் இணைந்துவிட்டார்கள். ஆனால், நானோ இன்னமும் GCSE ஆங்கிலத் தேர்வை எழுதிக்கொண்டிருக்கிறேன் என்கிறார் கோபிகா. எனக்கு இப்போதே 25 வயதாகப்போகிறது. இனி நான் பல்கலைக்கழகத்துக்குச் செல்லவேண்டும், அதில் ஒரு மூன்று ஆண்டுகள் போய்விடும். ஆக, என்னுடைய எதிர்காலத்தைக் குறித்து என்னால் திட்டமிட முடியவில்லை என்கிறார் அவர்.

பிரித்தானியாவில் எதிர்காலத்தை தீர்மானிக்க திணறும் இலங்கை இளம்பெண்: அகதிகளை கைவிடும் பிரித்தானிய கல்விமுறை | A British Education System That Abandons Refugees

image – news.sky

இதற்கிடையில், அகதிகளும் புகலிடக்கோரிக்கையாளர்களின் பிள்ளைகளும் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் இருப்பதை அரசு ஒப்புக்கொள்வதாக தெரிவிக்கும் அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர், பிள்ளைகளுக்கு பள்ளியில் போதுமான இடமளிப்பது உள்ளூர் அதிகாரிகளின் பொறுப்பு என்றும், அவர்கள்தான் அந்த பிள்ளைகளின் மொழி மற்றும் கலாச்சாரத் தேவைகளை கருத்தில்கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறார்.

எங்கள் இலவச பள்ளித் திட்டங்கள் மற்றும் நிதி உதவிகள், ஒவ்வொரு பிள்ளைக்கும், அவர்கள் எந்த பின்னணிகொண்டவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு நல்லதொரு பள்ளியில் இடம் கிடைக்கும் வாய்ப்புக் கிடைக்கவேண்டும் என்பதை உறுதிசெய்கின்றன என்கிறார் அவர்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.