மீனவர்களுக்கு விசேட அறிவித்தல்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

அடுத்த 24 மணித்தியாலத்துக்கானநாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2022 செப்டம்பர் 05ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

மழை நிலைமை:

புத்தளத்திலிருந்து கொழும்புமற்றும்காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில் அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில்பலஇடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானதுதென்மேற்குதிசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானதுமணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானதுஅவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரைஅதிகரிக்கக்கூடியசாத்தியம் காணப்படுவதுடன்திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறைமற்றும்மன்னார்ஊடாக புத்தளம்வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரைஅதிகரிக்கக்கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போதுமிகவும்கொந்தளிப்பாகக் காணப்படும்.

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறைமற்றும்மன்னார்ஊடாக புத்தளம்வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகள் அவ்வப்போதுகொந்தளிப்பாகக் காணப்படும்.நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகள்மிதமான அலையுடன்காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்புகாலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில்வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில்கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவேபுத்தளத்திலிருந்து கொழும்புகாலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில்வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில்கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும்மறு அறிவித்தல் வரைநடவடிக்கைகளில்ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.