மோடிக்கு பிடிக்காத “ஒரே வார்த்தை”..குஜராத்தில் வாக்குறுதியை அள்ளிவீசிய ராகுல் காந்தி! தேர்தல் வருதுல

குஜராத்: நரேந்திர மோடி, அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் அங்கு வெற்றிபெற்றால் கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவித்து இருக்கிறார்.

2019 தேர்தலுக்கு பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து இருப்பது அக்கட்சியினரிடமே அவநம்பிக்கையை ஏற்படுத்தியது.

2019 மக்களவைத் தேர்தல் படுதோல்விக்கு பிறகு காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட பிளவு, 5 மாநில தேர்தலுக்கு பிறகு பெரிதாக தொடங்கியது. இது காந்தி குடும்பத்தினருக்கு எதிரான அலையாகவும் உருவெடுத்த நிலையில் குலாம் நபி ஆசாத், கபில் சிபல் போன்ற தலைவர்கள் கட்சியை விட்டு விலகினர்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்

இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும், தங்கள் தலைமையை தொடர்ந்து தக்க வைக்கவும் காந்தி குடும்பத்திற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தல்.

ஜிக்னேஷ் மேவானி

ஜிக்னேஷ் மேவானி

இதற்கான முன்னேற்பாடுகளை கையில் எடுத்திருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி, பட்டியல் சமுதாய தலைவரும் பிரதமர் மோடியின் தொகுதியிலேயே சுயேட்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வானவருமான ஜிக்னேஷ் மேவானி இம்முறை தங்கள் கட்சியில் இணைத்து இருப்பது கூடுதல் பலத்தை தரும் என நம்புகிறது.

நரேஷ் பட்டேல்

நரேஷ் பட்டேல்

அதுமட்டுமில்லாமல் அங்கு பெருவாரியாக வசிக்கும் பட்டேல் சமுதாய மக்களின் வாக்குகளை அறுவடை செய்யவும் பல்வேறு காய்களை நகர்த்தி வருகிறது காங்கிரஸ். இதற்காக பிரபல தொழிலதிபரும் லேவா பட்டேல் சமுதாய தலைவருமான நரேஷ் பட்டேலை சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தியது காங்கிரஸ். ஆனால் அவர் அரசியலுக்கு வர விருப்பமில்லை என்று அறிவித்தார்.

ஹர்திக் பட்டேல்

ஹர்திக் பட்டேல்

லேவா பட்டிதார் அமைப்பின் தலைவரும் கோடியார் கோவிலை நிர்வகித்து வரும் கோடல்தாம் கோவில் அறக்கட்டளையின் தலைவருமான நரேஷ் பட்டேல் குஜராத்தில் மிகப்பிரபலமான முகமாக அறியப்படுகிறார். இவரை இழுக்கும் முயற்சியில் ஹர்திக் பட்டேலை கைவிட்டது காங்கிரஸ். இதனால் அவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இந்த நிலையில் குஜராத்தில் காங்கிரஸ் பூத் ஏஜெண்டுகள் கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். “காங்கிரஸ் குஜராத்தில் வெற்றிபெற்றால் ரூ.500 க்கு கேஸ் சிலிண்டர் கிடைக்க உறுதி செய்யப்படும். ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும்.” என்று உறுதியளித்தார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.