இந்திய நிறுவனங்கள் பொதுவாகவே ஊழியர்களை மிகவும் மோசமாக நடத்தும் என்றும், ஊழியர் நலனில் எவ்விதமான அக்கறையும் செலுத்துவது இல்லை என்றும் கருத்து உண்டு.
இதை நிரூபணம் செய்யும் வகையில் சமீபத்தில் பாம்பே ஷேவிங் கம்பெனி சிஇஓ சாந்தனு தேஷ்பாண்டே 22 வயதுடையவர்கள் புதிதாக வேலைக்குச் சேரும் போது தினமும் 18 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் எனப் பதிவிட்டார், இந்தப் பதிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல் மக்களைக் கோபமடையச் செய்தது.
இதன் எதிரொலியாகச் சாந்தனு தேஷ்பாண்டே தனது பதிவிற்கு மன்னிப்பு கேட்டது மட்டும் அல்லாமல் லிங்கிடுஇன் தளத்தை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளார்.
தற்போது இதே நிலையில் சொல்லப்போனால் இன்னும் மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார் Pristyn Care ஹர்சிமர்பீர் சிங். என்ன நடந்தது..?
இன்சூரன்ஸ் துறையில் 14- 15% வளர்ச்சி இருக்கலாம்.. Care Ratings மதிப்பீடு!
ஊழியர்கள்
இன்று அனைத்துத் தரப்பு ஊழியர்களும் தங்களுக்கான உரிமை, சுதந்திரம், தனிப்பட்ட வளர்ச்சி, வொர்க் -லைப் பேலென்ஸ், அனைத்திற்கும் மேலாக ஒரு சக ஊழியர்களுக்கான மரியாதை மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இளம் சிஇஓ-க்களின் ஊழியர்கள் மீதான கொடூரமான எண்ணம் பல கோடி மக்களைக் கோபப்படுத்தியுள்ளது.
Pristyn Care நிறுவனம்
Pristyn Care நிறுவனத்தின் இணை நிறுவனரான ஹர்சிமர்பீர் சிங் தனது லிங்கிடுஇன் கணக்கில் தனது ஹெல்த் டெக் நிறுவனத்தில் சரியான ஊழியர்களைச் சேர்வு செய்யப் பயன்படுத்தும் இண்டர்வியூ ஹேக் பற்றிச் சில முக்கியமான விஷயங்களைப் பட்டியலிட்டு உள்ளார். இது தான் இன்று ஹாட் டாப்பிக் ஆக மாறியுள்ளது.
லிங்கிடுஇன்
ஹர்சிமர்பீர் சிங் தனது லிங்கிடுஇன் தளத்தில் சரியான ஊழியரைத் தேர்வு செய்வது எப்படி..
1. காலை 8 மணிக்கு இண்டர்வியூவ்-க்காகப் போன் செய்யுங்கள், காலையில் சீக்கிரமாக விழிப்பவர்களைத் தேர்வு செய்ய முடியும்.
2. முதல் ரவுண்டு இண்டர்வியூவ்-ஐ இரவு 11 மணிக்கு வைக்கவும். நீண்ட நேரம் பணியாற்றுபவர்களைத் தேர்வு செய்ய முடியும்.
3. வர்த்தக நடைமுறை குறித்து விளக்கம் கேட்கவும் – ரியல் வோர்ல்டு திங்கிங்
4. அலுவலகத்தில் 6-8 மணிநேரம் காத்திருக்க வைக்கவும், அவர்களுடைய பொறுமையைச் சோதிக்கவும்
5. இரவு 9 மணிக்கு இண்டர்வியூவ் எடுக்க உங்கள் ஊழியருக்கு உத்தரவிடவும் – நீண்ட நேரம் பணியாற்ற வைக்க
6. ஞாயிற்றுக்கிழமைகளில் இண்டர்வியூவ் வைப்பதன் மூலம் வேலையில் அதிகளவில் ஆர்வமாக இருப்பவரைத் தேர்வு செய்ய முடியும்
7. வெளியூரில் இருப்பவரை அடுத்த நாளே இண்டர்வியூவ்-க்கு அலுவலகம் வரவழைக்கவும்.
டாக்சிக்-ஆன அலுவலகம்
இந்தப் பதிவுக்கு லிங்கிடுஇன் தளத்தில் இருப்பவர்கள் மிகவும் டாக்சிக்-ஆன அலுவலகம் என விமர்சனம் செய்தது மட்டும் அல்லாமல், Pristyn Care நிறுவனத்தையும், அதன் இணை நிறுவனரான ஹர்சிமர்பீர் சிங்-ஐயும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனால் அடுத்தச் சில மணிநேரத்தில் இந்தப் பதிவை ஹர்சிமர்பீர் சிங் நீக்கிவிட்டார் ஆனாலும் பலர் ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கழுவி ஊற்றி வருகின்றனர்.
சுய மரியாதை
மேலும் இதுபோன்ற நிறுவனத்தில் யாரும் பணியில் சேர கூடாது என்றும், குறிப்பாகச் சுய மரியாதை எதிர்பார்ப்பவர்கள் இங்குச் சேர கூடாது எனத் தெரிவித்துள்ளனர். நீங்கள என்ன நினைக்கிறீங்க கமெண்ட் பண்ணுங்க.
ட்விட்டர் வாசி
“நான் இந்த நிறுவனத்தில் 3 மாதங்கள் வேலை செய்தேன். இந்த ஹர்சிமர்பீர் சிங் அனைவரும் அலுவலகத்தில் ஒரு நாளைக்குக் குறைந்தது 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று தீவிரமாக விரும்புவார். அவர் 60-70 பேர் முன்னிலையில் ஊழியர்களைத் திட்டுவது / கத்துவது வழக்கம். அவர்களில் சிலர் அழுவதையும் பார்த்திருக்கிறேன். சில சமயங்களில் அவர் ஊழியர்களைச் சரிபார்ப்பதை நான் பார்த்திருக்கிறேன். யார் சீக்கிரம் கிளம்புகிறார்கள், அதாவது இரவு 7 மணிக்கு முன் கிளம்பும் ஊழியர்” என்று ஒரு ட்விட்டர் வாசி கருத்துத் தெரிவித்துள்ளார்.
Pristyn Care Harsimarbir Singh linkedin post on Interview Hacks got backlash
Pristyn Care Harsimarbir Singh linkedin post on Interview Hacks got backlash வாயை கொடுத்து மாடிகொண்ட Pristyn Care ஹர்சிமர்பீர் சிங்.. விளாசும் நெட்டிசன்..!