பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில், அபாரமாக விளையாடி அரைசதம் கடந்தார் விராட் கோலி. அவரது அபார ஆட்டத்துக்கு, அவர் மேற்கொண்ட தீவிர வலைப்பயிற்சியும் உதவியுள்ளது. விராட் கோலி பயிற்சி செய்தது தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது.
அதில் அவர், `’Altitude Mask’ என்ற சிறப்பு வகை மாஸ்க் அணிந்து பயிற்சி மேற்கொண்டார். இத்தகைய மாஸ்க் அணிந்து விராட் ஏன் பயிற்சி மேற்கொண்டார், பயிற்சியின்போது மாஸ்க் அணிந்தால் மூச்சுவிடவே கஷ்டமாகத்தானே இருக்கும் என்ற சந்தேகம் எழக்கூடும்.
ஆனால், விளையாட்டு வீரர்களும்,உடற்பயிற்சி நிபுணர்களும் அதிக அளவில் இந்த ’Altitude Mask’ பயன்படுத்துகிறார்கள். இதுபோல சிறப்பு வகை மாஸ்க் பயன்படுத்துபவர்களின் கூற்றுப்படி, அது உண்மையில் உடலினை வலிமையாக்குகிறது.
காரணம், High Altitude Mask பயன்படுத்தும் போது உடல் உள்ளிழுக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. இவ்வாறு குறையும் ஆக்ஸிஜன் அளவால், இதயம் மற்றும் நுரையீரல் சீரான வேகத்திலும் அதிக செயல் திறனோடும் இயங்கத் தொடங்கும். பின்னர், மாஸ்க் இல்லாமல் விளையாடும் போது, நம் உடல் சரியான அளவிலான ஆக்ஸிஜனை சரியான முறையில் பயன்படுத்தி இயங்கத் தொடங்கும்.
இதன் மூலம் ‘Altitude Mask’, உடலின் மேம்பட்ட செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது என்கின்றனர் இதை பயன்படுத்துவோர்.