வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவிலிருந்த தந்தை.. கல்லால் அடித்துக்கொன்ற மகள்!

திருமணத்தை மீறிய உறவிலிருந்த தந்தையை மகளே கல்லால் அடித்துக்கொன்ற சம்பவம் காசியாபாத்தில் நிகழ்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ரஹீஸ்பூர் கிராமத்துக்கு அருகில் கார் ஒன்று சந்தேகத்திற்கிடமாக நிற்பதைக் கண்டனர். அதனை திறந்து பார்த்தபோது காரின் பின் இருக்கையில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார். கார் எண் மற்றும் ஆவணங்களை வைத்து அந்த நபர் யார் என்பதை போலீசார் அடையாளம் கண்டனர். அதன்படி, இறந்த நபர் 40 வயதான நகைக்கடைக்காரர் என்பது தெரியவந்தது. அவருடைய மனைவி மற்றும் மகள் இருவரிடம் இரண்டு நாட்களாக விசாரணை நடத்தப்பட்டதில் இருவரும் சேர்ந்துதான் அவரை கொலை செய்தது தெரியவந்தது.
image
அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, நகைக்கடைக்காரருக்கு சகாரன்பூரிலுள்ள ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. அங்கு அவர் அடிக்கடி சென்றுவந்துள்ளார். அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும்போது மனைவிக்கு வீடியோ கால் செய்துள்ளார் அந்த நபர். இதனால் இருவருக்குமிடையே பயங்கர தகராறு ஏற்பட்டிருக்கிறது. அந்த தகராறின் நடுவே மகள் கல்லால் தந்தையை தாக்கியிருக்கிறார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எனவே இருவரும் சேர்ந்து உடலை காரில் வைத்து ரஹீஸ்பூர் கிராமத்திற்கு அருகே ஆளில்லாத இடத்தில் விட்டுச் சென்றிருக்கின்றனர்.
இந்த வாக்குமூலத்தை அடுத்து போலீசார் வீட்டை சோதனையிட்டதில் அவரை அடிக்க பயன்படுத்திய கல் மற்றும் ரத்தத்தை துடைக்க பயன்படுத்திய துணி ஆகியவற்றை கைப்பற்றினர். தந்தையை கல்லால் அடித்து கொலைசெய்த மகள் மற்றும் மனைவி ஆகிய இருவரையும் போலீசார் கைதுசெய்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.