2000 ஆண்டு பழமையான கோவில்.. 62 ஆண்டுக்கு முன்பு திருட்டு.. அமெரிக்கா மியூசியத்தில் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் திருவேதிக்குடி கண்டியூரில் உள்ள அருள்மிகு வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் போன்ற முனிவர்கள் தரிசித்து இறைவனின் பெருமையைப் பாடிய திருக்கோயில் என பழங்காலத்திலிருந்தே புகழ்பெற்று விளங்குகிறது.

இந்த நிலையில் வேதபுரீஸ்வரர் கோவிலில் 62 ஆண்டுகளுக்கு முன்பு புகந்த மர்ம நபர்கள் அங்கு பக்தர்களால் வனங்கப்பட்ட வந்த பழங்கால நடராஜனை திருடிச் சென்று உள்ளனர். இது தொடர்பாக திருவேதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த சம்மந்தம் சேதுராயர் மகன் சு.வெங்கடாசலம், வயது 50 என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், ஐடபிள்யூசிஐடி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் விசாரணையை ஐ.டபிள்யூ.சி.ஐ.டி., கும்பகோணம் ஆய்வாளர் டி.எம்.டி. இந்திரா தலைமையிலான குழுவினர் விசாரணை செய்ததில் இந்த புகார் உண்மையானது என கண்டுபிடித்தனர்.

மேலும், கோயிலில் பக்தர்கள் வழிபட்டு வந்த நடராஜர் சிலை போலியானது என்றும் புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, 62 ஆண்டுகளுக்கு முன்பு சில மரம் நபர்கள் மூல சிலையை திருடிச் சென்றுவிட்டதாகவும், விசாரணைக் குழு, பாண்டிச்சேரியின் இந்தோ-பிரெஞ்சு நிறுவனத்திடம் இருந்து அசல் புகைப்படப் படங்களைக் கேட்டு, அசல் சிலையின் படத்தைப் பெற்ற பிறகு, குழு பல்வேறு அருங்காட்சியகங்கள், கலைப்பொருள் சேகரிப்பாளர்களின் சிற்றேடுகள் மற்றும் ஏல மையங்களின் வலைத்தளங்களில் உலகளாவிய தேடலைத் தொடங்கி விரிவான தேடலுக்குப் பிறகு, குழுவினர் நியூயார்க்கில் உள்ள ASIA SOCIETY MUSEUM இல் அசல் சிலை போல் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

மேலும், அருங்காட்சியக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட சிலையின் படத்தை, பாண்டிச்சேரியில் உள்ள இந்தோ-பிரெஞ்சு நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட படத்துடன் ஒரு நிபுணர் ஒப்பிட்டுப் பார்த்தார், நியூயார்க்கில் உள்ள ஆசியா சொசைட்டி அருங்காட்சியகத்தில் உள்ள நடராஜர் சிலை பாண்டிச்சேரி பிரெஞ்ச் நிறுவனத்தில் பெறப்பட்ட திரிவேதிகுடி நடராஜர் சிலையின் புகைப்படம்தான். கவனமாக ஒப்பிட்டுப் பார்த்த நிபுணர். அருங்காட்சியகத்தில் உள்ள சிலை IFP இலிருந்து பெறப்பட்ட உருவம் ஒன்றுதான் என்று ஒரு சான்றிதழை வழங்கினார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

திருவேதிக்குடியில் நடராஜர் சிலை 62 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்த திருவீதிக்குடி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். யுனெஸ்கோ ஒப்பந்தத்தின்படி நடராஜர் சிலையை மீட்டு அருள்மிகு வேதபுரீஸ்வரர் கோவிலில் திருப்பணி செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கோயிலில் வேறு ஏதேனும் சிலைகள் திருடப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.