இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை தொழிலதிபரான சைரஸ் மிஸ்திரி இறந்த நிலையில், ரஷ்யாவில் கடந்த 9 மாதங்களில் 8 தொழிலதிபர்கள் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் 4 நபர்கள் காஸ்ப்ரோம் அல்லது அதன் துணை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் ரஷ்யாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான Lukoil உடன் தொடர்புடைய இருவர்கள் ஆவார்கள்.
அண்மையில் Lukoil நிறுவனத் தலைவர் ரவில் மாகனோவ் மருத்துவமனை ஜன்னல் வழியாகக் கீழே விழுந்து இறந்து கிடந்தார்.
சைரஸ் மிஸ்திரி மரணம்.. டாடா சன்ஸ் – ஷாபூர்ஜி பலோன்ஜி குரூப் பிரச்சனைகளுக்கு முடிவா..?
ரவில் மாகனோவ்
ரஷ்ய எண்ணெய் நிறுவனமான லுகோயிலின் தலைவரான ரவில் மகனோவ், வியாழன் அன்று மாஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஜன்னலில் இருந்து விழுந்து மர்மமான முறையில் இறந்தார்.
லியோனிட் ஷுல்மன்
காஸ்போர்ம் இன்வஸ்ட்மெண்ட் நிறுவனத்தில் போக்குவரத்து சேவையின் தலைவராக பணியாற்றி வந்தலியோனிட் ஷுல்மன் குளியலறையில் இறந்த நிலையில் ஜனவரி 30 அன்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. RIA செய்தி நிறுவனம் அவரது மரணம் தற்கொலை என தெரிவித்தது.
அலெக்சாண்டர் தியுலாகோவ்
காஸ்போர்ம் நிர்வாகியான அலெக்சாண்டர் தியுலாகோவ் ரஷ்யா உக்ரெய்ன் மீது போர் தொடக்க தொடங்கிய இரண்டு நாட்களில் பிப்ரவரி 25-ம் தேதி செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வீடு கேரேஜில் இறந்துக்கிடந்தார். இவரத வயது 61. இவரும் தற்கொலை செய்துக்கொண்டாதாக செய்திகள் வெளியாகின.
மிகைல் வாட்ஃபோர்ட்
– வாட்ஃபோர்ட், 66 வயதான உக்ரேனிய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர், பிப்ரவரி 28 அன்று தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு குடியிருப்பில் இறந்து கிடந்தார். இவரது இறப்புக்கு என்ன காரணம் என இப்போது வரை தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.
விளாடிஸ்லாவ் அவயேவ்
காஸ்ப்ரோம் வங்கியின் 51 வயதான முன்னாள் துணைத் தலைவரான அவயேவ், ஏப்ரல் 18 அன்று மாஸ்கோ குடியிருப்பில் அவரது மனைவி மற்றும் மகளின் உடல்களுடன் இறந்து கிடந்தார் என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகச் செய்திகள் வெளியாகின.
செர்ஜி புரோட்டோசென்யா
ஏப்ரல் 19 அன்று, ரஷ்யாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனமான நோவடெக் (NVTK.MM) இன் முன்னாள் உயர் மேலாளர் 55 வயதான செர்ஜி புரோட்டோசென்யா தனது மனைவி மற்றும் மகளுடன் ஸ்பெயினில் உள்ள ஒரு வில்லாவில் இறந்து கிடந்தார் என்று ரஷ்ய செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
விளாடிமிர் லியாகிஷேவ்
பிரத்யா கரவாயேவி உணவக சங்கிலியின் முன்னாள் இணை உரிமையாளரான 45 வயதான லியாகிஷேவ், அவரது அப்பார்ட்மெண்ட்டின் 16 வது மாடி பால்கனியில் மே 4-ம் தேதி இறந்து கிடந்தார் என்று ரஷ்யாவின் RBC ஊடக குழு தெரிவித்துள்ளது. இவர் உடலில் குண்டுகள் இருந்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
யூரி வோரோனோவ்
காஸ்ப்ரோமுக்கான ஆர்க்டிக் ஒப்பந்தங்களில் பணிபுரிந்த அஸ்ட்ரா-ஷிப்பிங்கின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான வோரோனோவ், லெனின்கிராட் பிராந்தியத்தில் உள்ள ஒரு வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் இறந்து கிடந்தார் என்று RBC ஜூலை மாதம் தெரிவித்து இருந்தது. அவர் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் காணப்பட்டார், அதே நேரத்தில் ஒரு கைத்துப்பாக்கி அருகில் காணப்பட்டது, RBC தெரிவித்துள்ளது.
8 Russian businessmen died in mysterious circumstances since Jan. How?
8 Russian businessmen died in mysterious circumstances since Jan. How? |9 மாதத்தில் மர்மமாக இறந்த 5 ரஷ்ய தொழில் அதிபர்கள்..!