அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்கள் – மீண்டும் குடியமர்த்த குழு அமைப்பு!

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த மக்களை, மீண்டும் இலங்கையில் கூடிய அமர்த்த சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

1983 ஆம் ஆண்டில் இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையே உள்நாட்டு போர் தொடங்கியது. இதை அடுத்து இலங்கையில் இருந்து ஏராளமான தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சமடைய தொடங்கினர். சுமார் 68 ஆயிரம் இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அகதிகள் முகாமல் தங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவில் வசித்து வரும் இலங்கை தமிழர்களை, மீண்டும் இலங்கையில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வு அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. அதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களை இலங்கையில் குடியமர்த்துவது குறித்து இலங்கை அதிபர் அணில் விக்ரமசிங்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

‘இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி வங்கதேசம்’ – பிரதமர் நரேந்திர மோடி

அதிபரின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய குழு ஒன்றை இலங்கை அரசு அமைத்துள்ளது.

அதிபரின் சிறப்பு செயலாளர் சந்திமா விக்கிரமசிங்கே தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள், குடிவரவுத் துறை அதிகாரிகள், நீதித் துறை அதிகாரிகள் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். தமிழக முகாம்களில் தங்கியுள்ள 3,800 இலங்கை தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்ப தயாராக இருப்பதாக சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தின் மூலம் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.