அதிகரிக்கும் கடன் சுமை.. இந்தியாவின் வெளிநாட்டு கடன் எவ்வளவு தெரியுமா?

டெல்லி: இந்தியாவின் வெளிநாட்டு கடன் விகிதம் முந்தைய ஆண்டினை காட்டிலும், கடந்த ஆண்டில் கணிசமாக அதிகரித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளும் கடன் பிரச்சனையால் பெரும் சரிவினைக் கண்டு வரும் நிலையில், அதனை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவின் கடன் அறிக்கை குறித்தான தரவுகள் வெளியாகியுள்ளது. இது இந்தியாவை எச்சரிக்கும் விதமாக வந்துள்ளது.

நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் அறிக்கையின் படி, இந்தியாவின் வெளிநாட்டு கடன் விகிதமானது, 8.2% அதிகரித்து, 620.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

மில்லியன் கடன்.. பாப்ஸ்டார் லேடிகாகா திவால் ஆனது ஆனாரா?

 ஜிடிபியில் - எவ்வளவு கடன்?

ஜிடிபியில் – எவ்வளவு கடன்?

இது முந்தைய நிதியாண்டில் (மார்ச் 2021) 573.7 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் மார்ச் 2021 இறுதியில் 21.2% ஆக இருந்த கடன் விகிதம், மார்ச் 2022ல் 19.9% ஆக குறைந்துள்ளது.

 

 நீண்டகால கடன்

நீண்டகால கடன்

இதே அன்னிய செலவாணி கையிருப்பு விகிதத்தில் முந்தைய ஆண்டில் 100.6% ஆக இருந்த வெளி நாட்டுக் கடன், மார்ச் 2022ல் 97.85 ஆக குறைந்துள்ளது.

இதற்கிடையில் இந்தியாவின் நீண்டகால கடன் அளவு 499.1 பில்லியன் டாலர் எனவும், இது மொத்த கடனில் 80.4% பங்கு வகிக்கிறது. இதே குறுகிய கால கடன் என்பது 121.7 பில்லியன் டாலராகவும் உள்ளது. இது 19.6% பங்கு வகிக்கிறது.

 

 என்னென்ன கடன்?
 

என்னென்ன கடன்?

மொத்த வெளி நாட்டு கடனில் பெரும்பகுதி வணிகக் கடனாகவே உள்ளது. இது கிட்டதட்ட 90% ஆகும். இதே வெளி நாடு வாழ் இந்தியர்களின் வைப்பு தொகைகள், குறுகிய கால வர்த்தக கடன் என பல வகையான கடன்கள் இதில் அடங்கும்.

இறையாண்மை கடன் விகிதம்

இறையாண்மை கடன் விகிதம்

குறிப்பாக நாட்டின் இறையாண்மை கடன் விகிதம் 17.1% அதிகரித்து, 130.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது சர்வதேச நாணய நிதியத்தால் ஸ்பெஷல் டிராவிங் ரைட்ஸ் (SDR) கூடுதலாக ஒதுக்கப்பட்டதன் காரணமாக இந்தளவுக்கு அதிகரித்துள்ளது.

இதே இறையாண்மை அல்லாத கடன் விகிதம் மார்ச் 2021 ஆண்டினை விட 6.1% அதிகரித்து, 490 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது பெரும்பாலும் வணிக கடனாக உள்ளது. இது தவிர என்ஆர்ஐ டெபாசிட்கள் மற்றும் குறுகிய கால கடன் என பலவும் இதில் அடங்கும்.

 

 என்ஆர்ஐ டெபாசிட்கள் சரிவு

என்ஆர்ஐ டெபாசிட்கள் சரிவு

என்ஆர்ஐ டெபாசிட்கள் 2% குறைந்து, 139 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. இதே வணிக கடன் விகிதம் 209.71 பில்லியன் டாலர்களாகவும், குறுகிய கால வர்த்தக கடன் 117.4 பில்லியன் டாலர்களாவும், அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

india’s External debt jump 8.2% to $620.7 billion till march 2022: Finance ministry

india’s External debt jump 8.2% to $620.7 billion till march 2022: Finance ministry/அதிகரிக்கும் கடன் சுமை.. இந்தியாவின் வெளிநாட்டு கடன் எவ்வளவு தெரியுமா?

Story first published: Tuesday, September 6, 2022, 10:01 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.