கடந்த சில நாட்களாக, உலகளாவிய காரணிகள், சர்வதேச சந்தையின் நிலை, மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றத்தைக் கண்டு வருகிறோம். எனினும், வரும் காலங்களில் தங்கத்தின் விலையில், ஏறுமுகமே நிலைக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள். உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.38,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.4,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் அதிகரித்து ரூ.59-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்த நிலையில் இன்று சற்று ஏற்றுத்துடன் தொடங்கியுள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை நிலவரப்படி கிராம் ரூ.4,722 ஆகவும், சவரன், ரூ.37,776 ஆகவும் இருந்தது.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.4,750-ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.112 அதிகரித்து, ரூ.38,000- ஆக ஏற்றம் கண்டுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர் சரிவைச் சந்தித்த நிலையில், கடந்த திங்கள்கிழமை கிராம் ரூ.4,765ல் தொடங்கியது.
இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு 14 உயர்ந்தும், சவரனுக்கு ரூ.112 அதிகரித்தும் விற்பனையானது. இன்றும் அதேபோல் சவரன் மற்றும் கிராமில் மாற்றம் ஏதுமில்லாமல் விற்பனையாலும், சவரன் ஒன்றுக்கு 38ஆயிரம் ரூபாயாக விற்கப்பட்டு வருகிறது. வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 50 காசு அதிகரித்து, ரூ.59-ஆகவும், கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.59,000 ஆகவும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.
இந்தியாவைப் பொறுத்த வரை, பல்வேறு மாநிலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் மாறுபடும். பல்வேறு வரி வகைகளைப் பொறுத்து பல்வேறு இடங்களில் விலைகள் மாறுபடுகின்றன. மேலும், செய்கூலி, சேதாரம் ஆகியவற்றின் அடிப்படையிலும், கடைக்கு கடை விலையில் ஏற்ற இறக்கத்தைக் காண முடிகின்றது.