வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: பெங்களூருவில் பெய்த கனமழை காரணமாக, முன்னர் ஏசி பஸ்களில் சொகுசாக சென்ற ஐ.டி., ஊழியர்கள், இன்று டிராக்டரில் பணிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தியாவில் ஐ.டி., நிறுவனங்கள் அதிகம் உள்ள நகராக பெங்களூரு உள்ளது. பல முன்னணி நிறுவனங்களின் அலுவலகங்கள் இங்கு தான் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் முன்பு சொகுசான ஏசி பஸ்களில் வருவது வழக்கம். அப்போது காதுகளில் ெஹட்போன், பாக்கெட்டில் விலை உயர்ந்த மொபைல்போன், மடியில் லேப்டாப் வைத்து கொண்டு மற்றவர்களை பற்றி கவலைப்படாமல், தனி உலகில் வாழ்ந்து வந்தனர். இதனால், அவர்களை பார்த்து மற்ற துறைகளில் பொறாமைப்பட்டனர்.
அவ்வாறு சொகுசாக அலுவலகம் சென்று வந்த ஐ.டி., ஊழியர்களின் நிலையை கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மாற்றிவிட்டது. பெங்களூருவில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்களால் பல இடங்களுக்கு செல்ல முடியவில்லை. இதனால், ஐடி ஊழியர்கள் வேலைக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. பணிகள் பாதிக்கப்பட்டன.
இதனை தவிர்க்க, முன்பு சொகுசு பஸ் ஏற்பாடு செய்த ஐடி நிறுவனங்கள், ஊழியர்களை அழைத்து வர டிராக்டர்களை ஏற்பாடு செய்தன. அதனை தவிர்க்க முடியாமல் ஐடி ஊழியர்களும் டிராக்டர்களில் அலுவலகம் வந்தனர். வரும் போது, டிராக்டர் பயணத்தை செல்பி எடுத்து அதனையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
மனம் இருந்தால்…
இதனிடையே, பெங்களூருவில் மழை காரணமாக சில ஐடி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரத்தில் அலுவலகம் சென்றனர். இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, மனம் இருந்தால் மார்க்கம் உண்டு எனக்கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement