டெல்லி: பொதுத்துறை நிறுவனங்களால் அரசுக்கு இழப்பு தான். இதனால் அரசுக்கு தேவையற்ற பொருளாதார இழப்பு என மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்சி பார்கவா தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து கூறுகையில், ஒரு நிறுவனம் தனது செயல்பாடுகளின் வழியாக ஈட்டும் வருவாயைக் கொண்டே தொடர்ந்து செயல்பட வேண்டும். அதன் வருவாயை முதலீடாகக் கொண்டே வளர்ச்சி அடைய வேண்டும்.
ஆனால் இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படுவதற்கு அரசுக்கு நிதி வழங்க வேண்டிய நிலை உள்ளது.
உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்த இந்தியா.. பிரிட்டன் பின்னுக்கு தள்ளப்பட்டது..!
இந்தியாவின் வளம் சுரண்டப்படுகிறது
இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்கள் இந்திய அரசின் வளத்தை சுரண்டுகின்றன. ஒரு நிறுவனத்தால் தனது இயக்கத்துக்கு தேவையான வருவாயை ஈட்ட முடியவில்லை என்றால், அதன் அடிப்படை கட்டமைப்பிலேயே மிகப்பெரிய பிரச்சனை இருக்கிறது என அர்த்தம். அப்படிப்பட்ட நிறுவனங்களால் தொடர்ந்து இழப்பு மட்டும் தான் ஏற்படும்.
சுதந்திரமாக செயல்பட முடியவில்லை
பொதுத்துறை நிறுவனங்களை நடத்துவது என்பது அரசுக்கு தொடர் இழப்பு தான். என்னை பொறுத்தவரையில் அரசு என்பது தொழிற்துறை செயல்பாட்டில் ஈடுபடவே கூடாது. பொதுத்துறை நிறுவனங்களை பொறுத்தவரையில் அவை சுதந்திரமாக செயல்படக்கூடிய கட்டமைப்பை கொண்டிருக்கவில்லை. அவை காலத்திற்கு ஏற்ப தங்களை மேம்படுத்த முடியாமல் உள்ளன. தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் உள்ளன.
தேங்கி நிற்கும் பொதுத்துறை நிறுவனங்கள்
அவை ஒரே இடத்திலேயே தேங்கி நிற்கின்றன. இந்தியா மட்டும் அல்ல, ரஷ்யா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று வருகின்றன.
உதாரணத்திற்கு மாருதி உதயாக் லிமிடெட் நிறுவனத்தினையே எடுத்துக் கொள்வோம்.இது அரசின் வசம் இருந்த வரையில் பெரியளவில் வளர்ச்சி காணவில்லை. இதே தனியார் (மாருதி சுசூகி இந்தியா லிமிடெட்) ஆன பிறகு எந்த அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
வரி செலுத்துவோரிடம் இருந்து பணம்
ஒரு நிறுவனம் என்பது செல்வத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும். அவற்றை சுரண்டுவதாக இருக்க கூடாது. பொதுத்துறை நிறுவனங்களை பொறுத்தவரையில் அப்படி இல்ல. அவை அரசினை எதிர் நோக்கியுள்ளன. ஒரு திறமையற்ற அமைப்பை ஆதரிக்க, வரி செலுத்துவோரிடமிருந்து பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்றும் பார்கவா சுட்டி காட்டியுள்ளார்.
Maruti chairman RC Bhargava criticizes PSUs for exploiting government money
Maruti chairman RC Bhargava criticizes PSUs for exploiting government money/அரசு பணத்தை சுரண்டும் பொதுத்துறை நிறுவனங்கள்.. மாருதி சுசூகி தலைவர் பொளீர்..!