ஆந்திரா மாநிலம் நெல்லூரில், 9-ம் வகுப்பு சிறுமியொருவர், தன்னுடைய மாமா ஒருவரால் கழுத்து அறுக்கப்பட்டு, ஆசிட் வீச்சுக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நேற்று மாலை நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுமி அந்த சமயத்தில் வீட்டில் தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பெற்றோர் யாருமற்ற அந்த நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த சிறுமியின் மாமன், திடீரென சிறுமியின் கழுத்தை அறுத்து, ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார்.
பின்னர் கொஞ்சநேரத்துக்கு, வீட்டின் குளியறையில் கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்த சிறுமியைக் கண்ட அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து உடனடியாக போலீஸுக்குத் தகவலளித்தனர். அதைதொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், சிறுமியை மீட்டு நெல்லையிலுள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மற்றும் அவர்கள் வீட்டின் அக்கம்பக்கத்தினரிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் கழுத்தை அறுத்து ஆசிட் வீசிய அந்த சிறுமியின் மாமன் நாகராஜ் தான் என்பது போலீஸுக்கு தெரியவந்திருக்கிறது. இது உறுதியாகவே போலீஸாரும் உடனடியாக நாகராஜைக் கைது செய்தனர். மேலும், எதற்காக நாகராஜ் இப்படி செய்தார் என்பது தெரியாத நிலையில், அதற்கான காரணம் குறித்து நாகராஜிடம் போலீஸார் விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றனர்.