ரஷ்யா – உக்ரைன் போருக்கு பின்பு சர்வதேச சந்தையில் ஈரான் முக்கியமான வர்த்தக நாடாக மாறி வருகிறது. குறிப்பாக எரிபொருள், எரிவாயு, அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது எனப் பல முக்கியக் காரணிகளுக்குத் தற்போது ஈரான் முக்கிய நாடாக விளங்குகிறது.
ஈரானும், ரஷ்யா போல உலக நாடுகளால் வர்த்தகத் தடை, பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் இந்தியா தனது முக்கியமான திட்டத்திற்காக ஈரான் நாட்டு அரசு அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
இதில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது.
20 வருட சரிவில் யூரோ.. ரஷ்யா செய்த வினை..!
ஜெய்சங்கர் – அமீர் அப்துல்லாஹியன்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், ஈரான் நாட்டின் வெளியுறவு அமைச்சரான ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் உடன் தொலைப்பேசியில் பேசி போது சபாஹர் துறைமுகம் மற்றும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் (INSTC) மற்றும் அணுசக்தி ஒப்பந்தம் அடங்கிய இருதரப்புப் பொருளாதாரக் கூட்டாண்மை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு
செப்டம்பர் 15-16 தேதிகளில் உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதியின் கீழ் சமர்கண்டில் திட்டமிடப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இந்த உரையாடல் நடந்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஈரான் இணைப்பு
இந்தியா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார்கள், அங்கு ஈரான் அதிகாரப்பூர்வமாக அடுத்த SCO உறுப்பினராக அனுமதிக்கப்பட உள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சர்
ஈரான் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன்-மிடமிருந்து அழைப்பு வந்தது. இந்தியா – ஈரான் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் JCPOA பற்றி விவாதிக்கப்பட்டது. இதைப்பற்றிக் கூடுதலாக ஆலோசிக்க உள்ளோம் காத்திருங்கள் என்று ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
பொருளாதாரத் தடை
இதேவேளையில் ஈரான் நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது, இது இந்தியா – ஈரான் மத்தியிலான வர்த்தக உறவு பல மடங்கு விரிவாக்கம் அடைய பெரும் வாய்ப்பாக இருக்கும்.
INSTC வழித்தடம்.
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களும், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களும் ஈரான் நாட்டின் வழியாக வருவதால் தெற்காசிய வழித்தடத்தில் முக்கியமானதாக மாறியுள்ளது சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம்(INSTC).
அணுசக்தி மின்சாரம் தயாரிப்பு
இதேபோல் இந்தியா அணுசக்தி மின்சாரம் தயாரிப்பு பணிகளை வேகப்படுத்தியுள்ள நிலையில் பொதுத்துறை நிறுவனமான NTPC இந்தியாவில் 2 இடத்தில் தலா இரு அணுஉலைகளை அமைக்கத் திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஈரான் நாட்டில் 10 யுரேனியம் சுரங்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
India Jaishankar and Iran Hossein Amir-Abdollahian talks on nuclear deal, bilateral economic partnership
India Jaishankar and Iran Hossein Amir-Abdollahian talk about the nuclear deal, bilateral economic partnership ஈரான் – இந்தியா: அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாகத் திடீர் பேச்சுவார்த்தை..!