கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருநாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறும் குறித்த நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், 24 மணி நேரத்துக்குள் களனி ஆற்றின் தாழ்வான பகுதிகள், கொழும்பு, கொலன்னாவ, கடுவெல, சீதாவக்க, அவிசாவளை, ஹன்வெல்ல, பியகம, தொம்பே, வத்தளை, தெஹியோவிற்ற, ருவன்வெல்ல, மற்றும் தெரணியகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் சிறிய வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.