அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுமா எனவும், கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என பழமொழிகளை பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருக்கக் கூடும். அமெரிக்காவில் இதுபோன்ற நிகழ்வு ஒன்று நடந்தது. திடீரென்று அவர் மொபைலில் வந்த மெசேஜை பார்த்ததும் அவர் ஒன்றுமே புரியாமல் திகைத்துப் போனார். அவரது வங்கிக் கணக்கில் சுமார் 3400 பில்லியன் ரூபாய் வரவு வைக்கப்பட்ட தகவலை பார்த்து, கிட்டத் தட்ட மயங்கி விழுந்து விட்டார் எனலாம். இந்த பரிவர்த்தனையின் மூலம், அவர் ஒரே இரவில், உலகின் 25 வது பணக்காரர் ஆனார். இருப்பினும், சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர் அனைத்தையும் இழந்து பழைய நிலைக்கே திரும்பி விட்டார்.
கடந்த ஜூன் மாதம், அமெரிக்காவின் லூசியானாவில் வசிக்கும் டேரன் ஜேம்ஸின் மொபைலில் ஒரு செய்தி வந்தது. அந்த செய்தியில் அவரது கணக்கில் ரூ.3400 பில்லியன் டெபாசிட் செய்யப்பட்டுள்ளாதாக எழுதப்பட்டிருந்தது. செய்தியைப் படித்ததும் அவரால் முதலில் நம்பவே முடியவில்லை. அவர் செய்தியை 2-3 முறை படித்தார். பின்னர் இதுபற்றி அவர் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். கணக்கில் இவ்வளவு பணம் வந்த நிலையில், காரணம் ஏதும் அறியாமல், குழம்பிப் போனார். ஆஅன்லா, அதனை பயன்படுத்த அவர் நினைக்கவில்லை. உண்மை வெள்யே தெரிந்தால் தான் மாட்டிக் கொள்ளலாம் என அவருக்கு அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில், உடனடியாக தனது வங்கிக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.
மேலும் படிக்க | Viral News: கேட்ட பார்த்தாலே பயமா இருக்கே… இது உலகின் கொலைகார தோட்டம்
டேரன் மீடியாக்களிடம் கூறுகையில், குடும்பத்தினர் நான் இந்த விஷயத்தை வெளியில் யாருக்கும் தெரிவிப்பதை விரும்பவில்லை, ஆனால், நானே முன்பு லூசியானா பொது பாதுகாப்புத் துறையில் சட்ட அமலாக்க துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். இப்போது நான் ரியல் எஸ்டேட் முகவராக இருக்கிறேன். எனவே இந்த தொகை தவறுதலாக வந்த பணம் என எனக்கு நன்றாக தெரியும். அப்படி இருக்கும் போது அதனை பயன்படுத்துவது சரியில்லை. எனவே, குடும்ப உறுப்பினர்கள் கூறுவதை புறக்கணித்து, வங்கிக்கு சென்றார். புகாரைப் பெற்ற வங்கி அவரது கணக்கை முடக்கியது. இந்த கோடிக்கணக்கான ரூபாய் அவரது கணக்கில் மூன்று நாட்களாக கிடந்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு வங்கியைத் திறந்தபோது, பணமும் பறந்து விட்டது. தவறாக வரவு வைக்கப்பட்ட பணம் திரும்ப பெறப்பட்டது. இந்தச் செய்தி உங்களுக்குத் தவறுதலாக வந்திருப்பதாகவும் அந்தப் பணம் வேறொருவருடையது என்றும் வங்கி கூறியது. அங்கிருந்த பணம் திரும்ப வந்து விட்டது.
வாழ்க்கையில் இவ்வளவு பணத்தை இதுவரை பார்த்ததில்லை எனக் கூறிய ஜேம்ஸ், அந்த மகிழ்ச்சி சில நொடிகளே நீடித்தது என்றார். உலகப் பணக்காரர்களில் எனது குடும்பம் சில நொடிகளுக்கு 25வது இடத்தில் இருந்தது. ஆனால் மேலும் சிக்கலைத் தவிர்க்க, நான் அவற்றைத் திருப்பித் தர நடவடிக்கை எடுத்தேன் என்றார்.
மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ