காணாமல் போன மேக் இன் இந்தியா.. இப்படியொரு பிரச்சனை இருக்கா..?

இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு ஏகப்பட்ட டிமாண்ட், இதேபோல் சிப் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி அளவுகள் குறைந்து விலையும் அதிகமாக உள்ளது.

இதனால் விற்பனை கணிக்கப்பட்ட அளவுக்கு இல்லை எனப் பல நிறுவனங்கள் புலம்பி வந்தாலும் வரலாறு காணாத உச்ச வர்த்தகத்தைத் தான் இந்திய எலக்ட்ரானிக்ஸ் சந்தை வைத்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் TWS அதாவது ப்ளூடூத் ஹெட்போன் வர்த்தகப் பிரிவில் முக்கியமான விஷயம் நடந்துள்ளது. இதைச் சமாளிப்பது எப்படி என்ற கேள்விக்கு விடை தெரியாமல் பல நிறுவனங்கள் நிற்கிறது.

ஈரான் – இந்தியா: அணுசக்தி ஒப்பந்தம் குறித்து திடீர் பேச்சுவார்த்தை.. எதற்காக..?

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்

பொதுவாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையில் இந்திய நிறுவனங்களைக் காட்டிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதிலும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தைப் பற்றி சொல்லவே தேவையில்லை.

TWS பிரிவு

TWS பிரிவு

ஆனால் TWS பிரிவு வர்த்தகத்தில் சீன நிறுவனங்களைக் காட்டிலும் இந்திய நிறுவனங்கள் பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. TWS என்பது தற்போது ஸ்மார்ட்போன்களுக்கு இணையாக அத்தியாவசிய பொருளாக மக்கள் மத்தியில் மாறியுள்ளது.

 168 சதவீத வளர்ச்சி
 

168 சதவீத வளர்ச்சி

TWS என்பது பணக்காரர்கள், வசதியானவர்கள் மட்டுமே வாங்கக் கூடிய பொருள் அல்ல, அனைத்துத் தரப்பு மக்களும் அவர்களுக்குத் தேவையான பட்ஜெட்-டில் வாங்கும் அடிப்படை பொருளாக உள்ளது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு 2வது காலாண்டில் TWS ஷிப்மென்ட் என்பது 168 சதவீத வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

BoAT, Noise, Boult Audio, Mivi

BoAT, Noise, Boult Audio, Mivi

TWS பிரிவின் மொத்த இந்திய வர்த்தகத்தில் சுமார் 46 சதவீதத்தை BoAT நிறுவனம் மட்டுமே வைத்துள்ளது. மற்ற 3 இந்திய நிறுவனங்களான Noise, Boult Audio, Mivi ஆகியவை சேர்ந்து மொத்தம் 70 சதவீத வர்த்தகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

உற்பத்தி சீனா

உற்பத்தி சீனா

ஆனால் 84 சதவீத TWS பொருட்கள் வெளிநாட்டில் இருந்து முழுமையாகத் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் இதன் தயாரிப்பு அளவு என்று பார்த்தால் வெறும் 16 சதவீதம் மட்டுமே.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

வர்த்தகச் சந்தையை இந்திய நிறுவனங்கள் வைத்திருந்தாலும், உற்பத்தியைச் சீனா-வை நம்பி தான் இந்திய பிராண்டுகளும், நிறுவனங்களும் இயங்கி வருகிறது. இதில் மேக் இன் இந்தியா எங்கே..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indian companies rule 70 percent of TWS market, But Indian manufacturing is just 16 percent

Indian tws companies BoAT, Noise, Boult Audio, and Mivi rule 70 percent of TWS market in India. But TWS Indian manufacturing is just 16 percent, rest is all dependent on China. Even though Indian tws companies dominate market share but failed in domestic manufacturing.

Story first published: Tuesday, September 6, 2022, 19:12 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.