நேற்று (5) பெய்த கன மழையினால் ,பாதுகாப்பற்ற வாய்க்காலில் விழுந்த, குருநாகல் வெஹெர பகுதியை சேர்ந்த பதினான்கு வயது மாணவன் உயிரிழந்துள்ளார்.
பிரதேசவாசிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட நான்கு மணித்தியால தேடுதல் நடவடிக்கையின் பின்னர் வாய்க்காலில் சிக்கிய இளைஞன் மீட்கப்பட்டு குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவன் வீடு செல்வதற்காக பாடசாலை வேனில் எற முற்படும்போது கால்வாயில் தவறி விழுந்துள்ளார். குருநாகல் வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் ,சடலம் தற்போது குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.