சைரஸ் மிஸ்ட்ரி உடன் பலியான ஜஹாங்கிர் பண்டோல்.. யார் இவர் தெரியுமா?

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி அவர்கள் சமீபத்தில் கார் விபத்தில் காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

சைரஸ் மிஸ்ட்ரி அவர்களின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்களும் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகர் உள்பட பல தொழிலதிபர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சைரஸ் மிஸ்ட்ரி உடன் அதே காரில் பயணம் செய்த ஜஹாங்கிர் பண்டோல் என்பவரும் இந்த விபத்தில் பலியானார். இவர் குறித்து பெரிய அளவில் செய்திகள் வெளிவராத நிலையில் ஜஹாங்கிர் பண்டோல் யார் என்பதை தற்போது பார்ப்போம்.

முன்னாள் டாடா குழுமத்தின் தலைவர்.. சைரஸ் மிஸ்ட்ரி குறித்து சில அறியப்படாத தகவல்!

ஜஹாங்கிர் பண்டோல்

ஜஹாங்கிர் பண்டோல்

பிரிட்டனில் உள்ள KPMG அலுவலகத்தில் குளோபல் ஸ்ட்ரேடஜி குழுமத்தின் இயக்குனர் தான் முன்னாள் டாடா சன்ஸ் தலைவர் சைரஸ் மிஸ்திரியுடன் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்யூவியில் பயணம் செய்த ஜஹாங்கிர் பண்டோல். இவரும் இந்த விபத்தில் சீட்பெல்ட் அணியாததால் உயிரிழந்தார்.

சோக விபத்து

சோக விபத்து

சைரஸ் மிஸ்ட்ரி மற்றும் ஜஹாங்கிர் பண்டோல் ஆகிய இருவரும் குஜராத்தின் உத்வாடாவில் இருந்து மும்பைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சோக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து விசாரணை செய்த போலீஸ் அதிகாரிகள், டேரியஸ் (ஜஹாங்கீரின் மூத்த சகோதரர்) மற்றும் அனாஹிதா (டேரியஸின் மனைவி) ஆகியோர் முன்பக்கத்தில் அமர்ந்திருந்ததாகவும், ஜஹாங்கிர் மற்றும் சைரஸ் ஆகியோர் காரின் பின்புறம் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

யார் இந்த ஜஹாங்கிர் பண்டோல்?
 

யார் இந்த ஜஹாங்கிர் பண்டோல்?

ஹாங்கீர் பண்டோல் 2000ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் லண்டன் பிசினஸ் கல்லூரியில் வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். அதன் பின் ஜஹாங்கீர் பண்டோல் லண்டன் கேபிஎம்ஜி அலுவலகத்தில் இயக்குநராக பணிபுரிந்தார். KPMG நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி, நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் விற்பனை, விநியோகம் ஆகியவற்றில் அவருடைய பங்கு மிகப்பெரியது.

ஸ்குவாஷ் வீரர்.

ஸ்குவாஷ் வீரர்.

ஜஹாங்கிர் பண்டோல் ஒரு தொழிலதிபர் மட்டுமின்றி ஒரு மிகச்சிறந்த விளையாட்டு வீரர் என்பது பலரும் அறியாத உண்மை. அவர் 1991ஆம் ஆண்டு ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார்.

பால்ய நண்பர்கள்

பால்ய நண்பர்கள்

ஜஹாங்கிர் பண்டோல் மற்றும் சைரஸ் மிஸ்ட்ரி ஆகிய இருவரும் பால்ய நண்பர் என்று கூறப்படுகிறது. பல வருடங்களாக நண்பர்களான ஜஹாங்கிர் பண்டோல் மற்றும் சைரஸ் ஆகிய இருவரும் இறப்பிலும் ஒன்று சேர்ந்தது சோகத்துக்குரிய ஒரு தகவல் ஆகும்.

 குளிர்பான நிறுவனம்

குளிர்பான நிறுவனம்

ஜஹாங்கிர் பண்டோல் குடும்பத்தினர் மங்கோலா போன்ற குளிர்பானங்கள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பெப்சி நிறுவனத்துக்கு தங்கள் நிறுவனத்தை விற்பனை செய்தனர்.

உத்வாடா சென்றது ஏன்?

உத்வாடா சென்றது ஏன்?

சமீபத்தில் இறந்த தங்களுடைய தந்தைக்காக பிரார்த்தனை செய்ய பண்டோல் சகோதரர்கள் சென்றனர் என்பதும், அவர்களுடன் சைரஸ் மிஸ்திரியும் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உத்வாடா பகுதியில் உள்ள கோயில் கடந்த சில ஆண்டுக்கு முன் மிஸ்திரி குடும்பத்தினரால் மிக அதிக செலவில் புதுப்பிக்கப்பட்டது என்பதும், அந்த கோயிலுக்கும் செல்ல திட்டமிட்டதாகவும் தெரிகிறது.

தந்தையை தொடர்ந்து மகன்

தந்தையை தொடர்ந்து மகன்

ஜஹாங்கிர் பண்டோல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது தந்தையை இழந்த நிலையில் தற்போது தந்தையை தொடர்ந்து அவரும் மறைவடைந்தது அவர்களது குடும்பத்தினர்களுக்கு பேரிழப்பு ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Who Was Jehangir Pandole Killed Along With Cyrus Mistry In Car Crash?

Who Was Jehangir Pandole Killed Along With Cyrus Mistry In Car Crash? | சைரஸ் மிஸ்ட்ரி உடன் பலியான ஜஹாங்கிர் பண்டோல்.. யார் இவர் தெரியுமா?

Story first published: Tuesday, September 6, 2022, 13:04 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.