தங்கம் விலையானது மீண்டும் கடந்த சில அமர்வுகளாகவே ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது அதன் ஆறு வார சரிவில் இருந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது இன்னும் ஏற்றம் காணுமா? மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது
இன்று கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? விலை நிலவரம் என்ன? குறிப்பாக சர்வதேச சந்தை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
மில்லியன் கடன்.. பாப்ஸ்டார் லேடிகாகா திவால் ஆனது ஆனாரா?
ஆறு வார சரிவில் இருந்து மீள்ச்சி
தங்கம் விலையானது அதன் ஆறு வார சரிவில் இருந்து மீண்டு வந்து கொண்டுள்ளது. இது திடீரென கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம், தங்கத்தின் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட சில காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
டாலர் மதிப்பு?
தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பானது, சற்று தடுமற்றத்தில் காணப்படுகின்றது. இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது வரவிருக்கும் அமர்வுகளிலும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா – ஐரோப்பா
ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில், மேற்கத்திய நாடுகளின் தடையால், ஐரோப்பா படிப்படியாக எரிபொருள் வாங்குவதை குறைத்துக் கொள்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஐரோப்பாவுக்கு செல்லுவும் கேஸ் பைப்லைனில் நிறுத்த போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஏற்கனவே எரிபொருள் பற்றாக்குறையால் பிரச்சனையை எதிர்கொண்டுள்ள ஐரோப்பாவுக்கு, இது மேற்கொண்டு அழுத்தத்தினை ஏற்படுத்தலம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் யூரோவின் மதிப்பானது 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
பொருளாதாரத்தில் தாக்கம்
ரஷ்யாவின் இந்த நடவடிக்கையினால் ஐரோப்பாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஐரோப்பிய மத்திய வங்கியானது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர வட்டி விகிதத்தினையும் அதிகரிக்கும் சூழலில் உள்ள நிலையில், இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
வட்டி அதிகரிப்பு
அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற நிலையில், தங்கம் நீண்டகால நோக்கில் அதிகரிக்குமா? என்பது கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது. ஏனெனில் வட்டி அதிகரிக்கப்பட்டால் மீண்டும் டாலரின் மதிப்பு உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பத்திர சந்தைக்கும் சாதகமாக அமையலாம். இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம்.
தேவை என்னவாகும்?
சர்வதேச அளவில் நிலவி வரும் மெதுவான வளர்ச்சிக்கு மத்தியில் தங்கத்தின் தேவையானது குறையலாம் என எதிர்பார்ப்பு நிலவினாலும், இந்தியாவினை பொறுத்த வரையில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தேவையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம். இது இந்தியாவில் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை?
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு 8.30 டாலர்கள் அதிகரித்து, 1730.95 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கம் சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் திகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை?
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் 1.85% அதிகரித்து, 18.210 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலையும் தங்கத்தினை போலவே கடந்த அமர்வின் முடிவு விலையினை இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
gold price on 6th September 2022: gold remains confined in a range
gold price on 6th September 2022: gold remains confined in a range / தங்கம் விலை இன்று எப்படியிருக்கு.. வாங்க சரியான வாய்ப்பா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?