தூது விட்ட எடப்பாடி பழனிசாமி… டெல்லி க்ரீன் சிக்னல்; டரியலில் ஓபிஎஸ்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி வைக்க, அதிமுக விரும்புவதாக, டெல்லி பாஜக மேலிடத்திற்கு தூது அனுப்பிய தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவில், முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒற்றைத் தலைமை விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்புக்கு இடையே, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம், எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து

மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்.

இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதுவரை நடைபெற்ற சட்டப் போராட்டங்களில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக ஒரேயொரு முறை முட்டுமே தீர்ப்பு வந்துள்ளது. மற்றபடி, எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருக்கிறது. கடைசி வாய்ப்பாக, உச்ச நீதிமன்றத்தை, ஓ.பன்னீர்செல்வம் நாடி உள்ளார். இதிலும் அவருக்கு செக் வைக்கும் விதமாக, எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க, அதிமுக விரும்புவதாக, டெல்லி பாஜக மேலிடத் தலைவர்களிடம், எடப்பாடி பழனிசாமி தரப்பு தூது அனுப்பிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து, எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள், பாஜக தலைவர்களிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான மத்திய அமைச்சரிடமும் இது தொடர்பாக அவர்கள் பேசியதாகவும் கூறப்படுகிறது.

அப்போது, “எடப்பாடி பழனிசாமியிடம் தான், ஒட்டுமொத்த அதிமுகவும் இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு தொண்டர்கள் ஆதரவும் இல்லை; நிர்வாகிகள் ஆதரவும் இல்லை. எனவே, எடப்பாடி பழனிசாமியை அனைவரும் ஒற்றைத் தலைமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர் எடுக்கும் முடிவே அதிமுக முடிவு” என்ற தகவலை, எடப்பாடி பழனிசாமி சார்பில் அவர்கள் தெரிவித்ததாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பாஜக மேலிடத்திற்கு குஷியை தந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.