சென்னை:
நடிகைகள்
என்று
சொன்னாலே
அதில்
பிரபலமானவராக
கருதப்படுவது
குஷ்பூ.
ஹீரோயினாக
உச்சத்தில்
இருந்தபோது
குஷ்புவின்
ரசிகர்கள்
அவருக்கு
கோவிலே
கட்டினார்கள்.
அதற்கு
அடுத்த
தலைமுறையில்
முன்னணி
கதாநாயகியாக
கருதப்பட்டவர்
சிம்ரன்.
அவர்
சமீபத்தில்
கொடுத்துள்ள
பேட்டியில்
பிதாமகன்
படத்தில்
பட்ட
சிரமம்
பற்றி
கூறியுள்ளார்.
முன்னணி
நடிகை
சிம்ரன்
அதிக
ஆண்டுகள்
தமிழ்
சினிமாவில்
நம்பர்
ஒன்
ஹீரோயினாக
வலம்
வந்தவர்.
அத்தனை
ஆண்டுகளும்
ஒரே
உடல்வாகை
மெயிண்டெய்ன்
செய்தவர்.
நடிப்பு,
நடனம்,
நகைச்சுவை
என்று
அனைத்திலும்
வல்லவராக
இருந்தவர்
சிம்ரன்.
திருமணம்
செய்து
கொண்டு
தானாகவே
தான்
திரைத்துறையை
விட்டுச்
சென்றாரே
தவிர
அவருக்கு
மார்கெட்
குறையவே
இல்லை.
விஜய்க்கே
டஃப்
விஜய்யுடன்
பல
படங்களில்
ஜோடியாக
நடித்துள்ளார்
சிம்ரன்.
அவர்கள்
சேர்ந்து
ஆடிய
ஆல்
தோட்ட
பூபதி
பாடல்
எவ்வளவு
பெரிய
ஹிட்
என்று
சொல்லி
தெரிய
வேண்டியதில்லை.
விஜய்
மற்றும்
சிம்ரன்
வழக்கம்
போல
அந்தப்
பாட்டிலும்
டான்சில்
பட்டையை
கிளப்பி
இருப்பார்கள்.
அதிலிருந்த
சில
ஸ்டெப்ஸ்
விஜய்க்கே
டஃப்பாக
இருந்ததாம்.
ஆனால்
சிம்ரன்
அதை
எளிதாக
ஆடி
விஜய்க்கே
டஃப்
கொடுத்ததாக
ஒரு
பேச்சு
உண்டு.
சிறப்பான
நடனம்
பிரபுதேவா
மாஸ்டர்
மற்றும்
ராஜு
சுந்தரம்
மாஸ்டருடன்
அவர்
ஆடிய
பாடல்கள்,
ஆல்தோட்ட
பூபதி,
பஞ்சதந்திரத்தில்
ரம்யா
கிருஷ்ணனுடன்
போட்டி
போட்டு
அடிய
வந்தேன்
வந்தேன்
பாடல்
என்று
அவருடைய
நடனத்
திறமையை
நிரூபித்த
பல
பாடல்களை
வரிசை
கட்டிச்
சொல்லலாம்.
அப்படிப்பட்ட
சிம்ரனே
ஒரு
பாடலில்
சிரமப்பட்டு
ஆடினாராம்.
பிதாமகன்
ரீமிக்ஸ்
ஒரு
பக்கம்
தமிழ்
சினிமாவில்
பழைய
பாடல்கள்
ரீமிக்ஸ்
செய்த
டிரெண்ட்
இருந்த
நேரத்தில்
பழைய
பாடல்களை
அப்படியே
இசை
கோர்வையாக
கோர்த்து
வந்த
ஒரு
மெட்லி
பிதாமகனில்
இடம்
பெற்றது.
நடிகை
சிம்ரனாகவே
அந்தப்
பாட்டில்
ஆடியிருப்பார்.
அந்தப்
பாட்டிலேயே
ஒரு
கட்டத்தில்,”என்ன
பாட்டு
இவ்ளோ
பெருசா
இருக்கு?”
என்று
கேட்டபடி
ஆட,
சூர்யா
விடாமல்
சிம்ரனை
மக்கள்
முன்பு
ஆட
வைப்பார்.
அதன்
முடிவில்
விக்ரம்,
சூர்யா,
சிம்ரன்
என
அனைவரும்
சேர்ந்து
ஆடும்
ஒரு
பெரிய
ஷாட்
இருந்ததாம்.
அதில்
ஆடுவதற்குத்தான்
தான்
மிகவும்
சிரமப்பட்டதாகவும்
அந்த
அளவிற்கு
டஃப்பாக
இருந்ததாகவும்
விக்ரம்
அந்தக்
கதாபாத்திரமாக
அந்த
ஷாட்டில்
கத்திக்
கொண்டே
இருந்தார்
என்றும்
சிம்ரன்
சமீபத்திய
பேட்டி
ஒன்றில்
கூறியுள்ளார்.