நடுத்தர மக்களை குறி வைத்து களமிறங்கும் சீன நிறுவனம்.. இந்தியாவில் ஆட்டம் பலிக்குமா?

என்ன தான் பல சர்வதேச நாடுகளும் இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் களமிறங்கியிருந்தாலும், இன்று வரையில் இந்திய சந்தையில் டாப்பராக இருப்பது சீன நிறுவனங்கள்.

இது பட்ஜெட் விலை என்ற போர்வையின் மத்தியில் மக்களை கவரும் சீன நிறுவனங்கள், குறைந்த விலையில் பல்வேறு அம்சங்களுடன் காய் நகர்த்தி வருகின்றன.

இதனால் இன்றும் சாம்சங், ஆப்பிள் என பல நிறுவனங்கள் இருந்தாலும், அதிக விற்பனை செய்வது சீன நிறுவனங்கள் தான்.

ரூ.1 கோடிக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் தேவையா.. கவனிக்க வேண்டிய சிறப்பம்சங்கள்!

புதிய பிராண்டுகள்

புதிய பிராண்டுகள்

இந்த நிலையில் மேற்கோண்டு இந்தியாவில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தினை கருத்தில் கொண்டு, சீன நிறுவனங்கள் அதன் புதிய பிராண்டுகளை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளன. அதனையும் நடுத்தர மக்களுக்கு ஏற்றவாறு பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளன. குறிப்பாக சீனாவின் டெக் ஜாம்பவான் ஆன ஜியோமி இந்திய சந்தையில் மூன்று வகையான பட்ஜெட் போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது.

3 புதிய போன்கள்

3 புதிய போன்கள்

ஜியோமி நிறுவனம் ரெட்மி ஏ1, ரெட்மி 11 பிரைம் 4ஜி, ரெட்மி 11 பிரைம் 5ஜி உள்ளிட்ட போன்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதில் ரெட்மி ஏ1 செப்டம்பர் 9 அன்று, மாலை 4 மணிக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ரெட்மி 11 பிரைம் 4ஜி, ரெட்மி 11 பிரைம் 5ஜி போன்கள் செப்டம்பர் 12 அன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

எங்கு வாங்கலாம்
 

எங்கு வாங்கலாம்

மேற்கண்ட இந்த 3 புதிய போன்களும் அமேசான் மற்றும் Mi.Com இணையம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இது தவிர ஆஃப் லைன் ஸ்டோர்கள் மூலமும் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது.

ரெட்மி ஏ1 விலை எவ்வளவு?

ரெட்மி ஏ1 விலை எவ்வளவு?

ரெட்மி ஏ1 – 2ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கறுப்பு மற்றும் பச்சை, நீல கலர்களில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது 6.52 inc ஹெச் டி + டிஸ்ப்ளேவுடன் கூடிய, MediaTek Helio A22 ப்ராசசர் என பல அம்சங்களுடன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி 11 பிரைம் 4ஜி விலை எவ்வளவு?

ரெட்மி 11 பிரைம் 4ஜி விலை எவ்வளவு?

ரெட்மி 11 பிரைம் 4ஜி போன் ஆனது இரண்டு மாடல்களில் கிடைக்கும். இதில் 4ஜிபி ரேம் வசதியுடன் 64 ஜிபி வரையில் ஸ்டோரேஜ் வசதியுடன் கிடைக்கும். இதன் விலை 12,999 ரூபாயாகும். மற்றொரு மாடலில் 6ஜிபி ரேம் வசதியுடன், 128 ஜிபி ஸ்டோரோஜ் உடன் இருக்கும். இதன் விலை 14,999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது 6.58 inc ஹெச் டி + டிஸ்ப்ளேவுடன் கூடிய, MediaTek Helio G99 ப்ராசசர் என பல அம்சங்களுடன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர இன்னும் பல அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ரெட்மி 11 பிரைம் 5ஜி விலை எவ்வளவு?

ரெட்மி 11 பிரைம் 5ஜி விலை எவ்வளவு?

ரெட்மி 11 பிரைம் 5ஜி- ன் அடிப்படை மாடல் ஆனது, 4ஜிபி ரேம் வசதியுடன் 64 ஜிபி வரையில் ஸ்டோரேஜ் வசதியுடன் கிடைக்கும். இதன் விலை 13,999 ரூபாயாகும்.

இதே மற்றொரு மாடலில் 6ஜிபி ரேம் வசதியுடன், 128 ஜிபி ஸ்டோரோஜ் உடன் இருக்கும். இதன் விலை 15,999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜியோமி ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு 1000 ரூபாய் பிளாட் தள்ளுபடி கிடைக்கும்.

இது 6.58 inc ஹெச் டி + டிஸ்ப்ளேவுடன் கூடிய, MediaTek Helio G99 ப்ராசசர் என பல அம்சங்களுடன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர இன்னும் பல அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

China’s Xiaomi plans to launches 3 new budget phones in india: check details here

China’s Xiaomi plans to launches 3 new budget phones in india: check details here/நடுத்தர மக்களை குறி வைத்து களமிறங்கும் சீன நிறுவனம்.. இந்தியாவில் பலிக்குமா ஆட்டம்!

Story first published: Tuesday, September 6, 2022, 20:25 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.