கேராளாவில் நடைபெற்ற தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்த முதல்வர் ரங்கசாமி மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது… கேராளாவில் தென் மண்டல கவுன்சில் மாநாடு நடைபெற்றது. முதலமைச்சர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை. ஆனால், ஆளுநர் தமிழிசை கலந்து கொண்டுள்ளார்.
முதல்வர் ரங்கசாமி கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்? உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை ரங்கசாமி புறக்கணித்ததின் பின்னணி என்ன? என கேள்வியெழுப்பிய நாராயணசாமி, இந்த சம்பவம் பாஜக-விற்கும் ரங்கசாமிக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டால் மாநில உரிமையை விட்டு கொடுப்பதாக உள்ளது.
ஆகவே புதுச்சேரி மக்கள் மத்தியில் முதல்வர் ரங்கசாமி பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும் மத்திய அரசின் பிரதிநிதியாக உள்ள ஆளுநர், மாநில அரசின் உரிமை நலன்களுக்கு எப்படி முமுமையாக செயலாற்றுவார். புதுச்சேரியில் சூப்பர் முதலமைச்சராக தமிழிசை செயல்படுகின்றார். டம்மி முதல்வராக ரங்கசாமி செயல்படுவது உறுதியாகிவிட்டது.
காரைக்கால் மருத்துவமனையின் மெத்தனப்போக்கால் தான் விஷம் கலந்த குளிர்பானம் அருந்திய மாணவன் உரிய சிகிச்சையின்றி உயிரிழந்ததற்கு காரணம் மாணவன் உயிரிழப்புக்கு காரணம் குறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM