மகாபலி போல் வேடமிட்டு வங்கிக்கு வந்த எஸ்பிஐ ஊழியர்.. களைகட்டும் ஓணம் திருவிழா!

கேரள மக்கள் கொண்டாடும் பாரம்பரிய முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம். ஓணம் என்றாலே கலர் கலரான கோலங்களும், அந்த விழாவில் போடப்படும் புலியாட்டமும் மிக பிரபலம்.

இந்த ஓணம் திருவிழாவானது அசுரர்களிலேயே மக்கள் மிகவும் நேசிக்கக்கூடிய வளமாக, திறமையான ஆட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி, ஒவ்வொரு ஆண்டும் மக்களை வந்து பார்த்து வளமோடு, செழிப்பாக வாழ்கிறார்களா என பார்த்து செல்வதாக கொண்டாடப்பட்டு வரும் நிகழ்வு தான் ஓணம் பண்டிகை.

இது மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளாகவும், கேரள புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகின்றது.

இந்தியா 3வது பெரிய பொருளாதாரமாக வளர்ச்சி காணும்.. எஸ்பிஐ-ன் சூப்பர் அப்டேட்!

பாரம்பரிய விழா

பாரம்பரிய விழா

10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த விழாவில், பெண்கள் பாரம்பரிய உடையணிந்து, பிரம்மாண்ட பூக்கோலம் இடுவதே தனி அழகு தான். இது ஒரு புறம் எனில் மறுபுறம் மகாபலி மன்னனை வரவேற்று பாடும் கைகொட்டுகளி நடத்தின் பெண்கள் இணைந்து ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.

எஸ்பிஐ ஊழியர் அசத்தல்

எஸ்பிஐ ஊழியர் அசத்தல்

இப்படிப்பட்ட ஒரு பாரம்பரிய திருவிழா வரவிருக்கும் 8ம் தேதி கேரளாவில் கொண்டாடப்படவுள்ளது. இதற்கிடையில் கேரளாவே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஓணம் விழா களைகட்டத் தொடங்கியுள்ளது.

இந்த விழாவினை முன்னிட்டு எஸ்பிஐ ஊழியர் ஒருவர் தனது சந்தோஷத்தினை வெளிப்படுத்தும் விதமாக மகாபலி அரசர் போல வேடமிட்டு, வங்கிக்கு வந்துள்ளது சமூக வலைதளங்களில் பல ஆயிரம் பேரினை ஈர்த்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கும் மகாபலி
 

வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கும் மகாபலி

மகாபலி அரசர் போல வேடமிட்டு வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் வருகின்றது. எஸ்பிஐயில் நடந்த இந்த சம்பவமானது கேரளாவின் தலச்சேரியில் நடந்துள்ளதாக தெரிகிறது.

 விமர்சனம்

விமர்சனம்

நிக்சான் ஜோசப் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் இதனை காண முடிகிறது. இது குறித்து பலரும் இணைத்தில் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ஊழியரின் ஆற்றலை பாராட்டி வருகின்றனர்.

எனினும் இந்த ஊழியரின் ஆடை குறியீட்டினை ஓய்வுபெற்ற எஸ்பிஐ சிஜிஎம் அதிகாரி. எஸ்பிஐ ஒரு டிரஸ் கோடினை கொண்டுள்ளது. இதனை அனுமதித்தால் கிளைகளில் வங்கி சேவையினை விட, அதிகமான திரையரங்கு சேவை இருக்கலாமென விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

SBI employee dressed up as King Mahabali for Onam festival and bank service

SBI employee dressed up as King Mahabali for Onam festival and bank service/மகாபலி போல் வேடமிட்டு வங்கிக்கு வந்த எஸ்பிஐ ஊழியர்.. களைகட்டும் ஓணம் திருவிழா!

Story first published: Tuesday, September 6, 2022, 17:49 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.