முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள தகைசால், மாதிரி பள்ளிகளின் சிறப்பம்சங்கள் என்ன?

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தலைசால் பள்ளிகள் மற்றும் மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டும் என்று அறிவித்துள்ள நிலையில், தகைசால் மற்றும் மாதிரி பள்ளிகளின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை பார்ப்போம்.
நேற்று தமிழகம் முழுவதும் 26 தலைசால் பள்ளிகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளை மாற்றும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் முன்னெடுப்பு நடவடிக்கை அரசுப்பள்ளிகளை நோக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
image
சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தமிழகத்தில் மாதிரி பள்ளிகள் மற்றும் தகைசால் பள்ளிகள் தொடங்கப்படும் திட்டத்தை துவக்கி வைத்தனர். அந்த வகையில் 26 தகைசால் பள்ளிகளும் 15 மாதிரி பள்ளிகளும் புதிதாக தொடங்கப்பட உள்ளன. மேலும் நடப்பு கல்வியாண்டு முதலே இந்த இரண்டு வகைபள்ளிகளும் தமிழகத்தில் செயல்பட உள்ளது.
தகைசால் பள்ளி மற்றும் மாதிரி பள்ளி வேறுபாடு என்ன .?!
தகைசால் பள்ளிகள், ஆயிரத்திற்கும் மேல் மாணவர்கள் கொண்ட அரசு பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக மாற்றப்படும். அந்த வகையில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், நவீன கணினி மற்றும் அறிவியல் ஆய்வகங்கள், ஒருங்கிணைந்த நூலகம், விளையாட்டு, கலைகள் மற்றும் இலக்கியம் என அனைத்தும் சேர்ந்த ஒரு முழுமையான கல்வியை நேரிடையாகவும், இணைய வசதிகளை பயன்படுத்தியும் கற்றல் திறன்கள் மேம்படுத்தப்பட உள்ளது.
மேலும் ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு மாணவர்கள் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்து, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயர்கின்ற வகையில் தகைசால் பள்ளிகள் ஏற்படுத்தப்படும்.
image
அந்தவகையில் முதற்கட்டமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் முதலிய 15 மாவட்டங்களில் உள்ள 1000த்துக்கும் மேல் மாணவர் எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தகைசால் பள்ளிகளாக மாற்றப்பட உள்ளது.
மாதிரிப் பள்ளிகள், உண்டு உறைவிட வசதியுடன் மாதிரிப்பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது. 10ஆம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவர்கள் மாதிரிப்பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். மேலும் 10ம் வகுப்பு மதிப்பெண் தவிர்த்து NTSE தேசிய திறனறிவுத்தேர்வு, NMMS எனப்படும் தேசிய வருவாய் வழித்தேர்வு, விளையாட்டுகள் மற்றும் கலைகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களும் மாதிரிப்பள்ளிகளில் சேருவதற்கு உரிய தகுதிகளாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில், தொழில்முறை கல்வி பிரிவுகளில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் சேர்ந்து பயிலும் வாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் மாதிரிப் பள்ளிகளில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் பயிற்சிகள் அளிக்கப்படும்.
image
அந்த வகையில், இந்த கல்வியாண்டில் சென்னை, மதுரை, திருப்பத்தூர், நீலகிரி, திருவாரூர், சிவகங்கை, ஈரோடு, இராமநாதபுரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருவள்ளூர், வேலூர், நாகப்பட்டினம் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 அரசுப் பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக தொடங்கப்பட உள்ளது.
மேலும், அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றியும் மற்றும் மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறனை அடிப்படையாகக் கொண்டும் மாதிரிப் பள்ளிகளில் சேர்க்கை நடைபெற இருக்கிறது. வரும் ஆண்டுகளில் மாவட்டத்தில் ஒரு மாதிரிப்பள்ளி என்கிற அடிப்படையில் மாதிரி பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளன.
– ரமேஷ்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.