புதுடில்லி: பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த மூக்கு வழியே செலுத்தப்படும் கோவிட் தடுப்பு மருந்தை அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்ள, டிஜிசிஏ எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அணையம் அனுமதி வழங்கி உள்ளது. இந்தியாவில் மூக்கு வழியாக செலுத்தப்படும் முதல் மருந்து இதுவாகும்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவிட்டிற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் புது உத்வேகம் கிடைத்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியே செலுத்தப்படும் கோவிட் தடுப்பு மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அவசர காலத்தில் டிஜிசிஏ ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது, கோவிட்டிற்கு எதிரான நமது போராட்டத்திற்கு புதிய பலத்தை வழங்கும். பிரதமர் மோடி தலைமையில், கோவிட்டிற்கு எதிரான போராட்டத்தில் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, மனித வளத்தை இந்தியா பயன்படுத்தும். அறிவியல் ஆராய்ச்சி அடிப்படையில், கோவிட்டை வெல்வோம். இவ்வாறு அந்த அறிக்கையில் மன்சுக் மாண்ட்வியா கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement