கொரோனாவுக்கு முன்பு வரையில் இன்சூரன்ஸ் என்றாலே அலறி அடித்து தள்ளி நின்றவர்கள் கூட, தற்போது இன்சூரன்ஸ் எடுத்தால் என்ன என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்தளவுக்கு மக்களை கொரோனா பாடாய் படுத்தியுள்ளது.
எனினும் 1 கோடி ரூபாய்க்கு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியா? இது தேவையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உண்மையில் 1 கோடி ரூபாய்க்கு ஹெல்த் இன்சூரன்ஸ் செய்ய முடியுமா? இந்தளவுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் தேவைதானா? யாரெல்லாம் இதனை எடுத்துக் கொள்ளலாம், வாருங்கள் பார்க்கலாம்.
காணாமல் போன மேக் இன் இந்தியா.. இப்படியொரு பிரச்சனை இருக்கா..?
ரூ.1 கோடிக்கு பாலிசி தேவையா?
மருத்துவமனை கட்டணங்கள் சில பல லட்சங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாக உள்ளது. ஆனால் கோடியில் செலவாகுமா? அப்படி இருந்தாலும் அது மிக அரிதுதானே. இது சாத்தியமில்லை என்று கூறி விட முடியாது. யாரேனும் சிலருக்கு தேவைப்படலாம். ஆக தேவைப்படுபவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
குடும்பத்திற்கு ஏற்ப எடுக்கலாம்?
நடைமுறையில் 2 பெரியவர்கள், 2 குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் 20 – 25 லட்சம் காப்பீடு என்பது போதுமானது. ஆக நீங்கள் 20 – 25 லட்சம் ரூபாய் வரையிலான அடிப்படை திட்டத்திற்கு செல்லலாம். இல்லையெனில் 10 லட்சம் ரூபாய் வரையிலான திட்டத்திலும் இணையலாம். இதில் உங்களின் தேவைக்கு ஏற்ப டாப் அப் கவரை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று சந்தையில் டாப் அப் திட்டங்கள் பலவும் கிடைக்கின்றன.
அடிப்படை திட்டங்கள் என்ன?
பெரிய பலன் கிடைக்கும் திட்டங்கள் வைத்திருப்பது நல்லது தான். ஆனாலும் இது உங்களது செலவு திட்டத்தில் வரவுள்ளதால், பலரும் இதற்கு தயாராக இல்லை. ஆக போதுமான அடிப்படை தொகைக்கு செலவிட்டு பிறகு, உங்கள் தேவைக்கு ஏற்ப கூடுதல் திட்டங்களை இணைத்துக் கொள்ளலாம்.
தீவிர நோய் கொண்டவர்களுக்கு பலன்
இது பற்றி கூறும் நிபுணர்கள், 1 கோடி ரூபாய்க்கான காப்பீடு அனைவருக்கும் தேவைப்படாது. எனினும் தீவிர நோய் வரலாறு கொண்ட குடும்பங்களுக்கு இத்தகைய பெரிய காப்பீடு என்பது மிகவும் உதவிகரமாக இருக்கும். ஏனெனில் தீவிர நோய்க்கான சிகிச்சை செலவுகளும் மிக அதிகம். அதே போல ஒரே ஆண்டில் பலமுறை ஹாஸ்பிடல் செலவுகள் செய்ய நேரிடலாம். ஆக அந்த சமயத்தில் இதுபோன்ற காப்பீட்டுத் தொகை நிச்சயம் சிறந்த ஒன்றாக இருக்கும்.
வருமானத்தில் அடக்கமா?
எனினும் 1 கோடி ரூபாய் திட்டத்தினை உங்களது வருமானத்திலேயே எடுக்க முடிந்தால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதில் நீங்கள் கவனமாகவும் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. ஏனெனில் இதில் ஆரம்பத்தில் பிரீமியம் குறைவாக இருக்கலாம். பாலிசி பிரபலமானவுடன் பிரீமியம் அதிகரிக்கலாம்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை?
சில நேரங்களில் உங்களது இன்சூரன்ஸ் திட்டங்கள் நிறுத்தப்படலாம். அதுபோன்ற சமயங்களில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மாற்று திட்டங்களை கொடுக்கலாம். ஆனால் அதுபோன்ற திட்டங்களில் பிரீமியம் அதிகமாக இருக்கலாம்.
ஒரு பெரிய காப்பீட்டு தொகையில் பல்வேறு நோய்கள் கவர் செய்ய முடியுமா, அறை வாடகை வரம்புகள், மருத்துவ செலவுகள், மற்ற விதி விலக்குகள் என பலவற்றையும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
பாலிசி வாங்குவதற்கு முன்பே அதன் காப்பீடு வரம்புகளை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
Do you need a Rs.1 crore health insurance cover?
Do you need a Rs.1 crore health insurance cover?/ரூ.1 கோடிக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் தேவையா.. கவனிக்க வேண்டிய சிறப்பம்சங்கள்!