வங்கதேசத்தின் பெரிய சந்தை இந்தியா: பிரதமர் மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ஆசியா முழுவதும், வங்கதேசத்திலிருந்து ஏற்றுமதி செய்வதற்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர், நீர் மேலாண்மை, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது, தெற்கு ஆசியாவில் நிலைத்தன்மையை உருவாக்குவது,அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், போதை மருந்து மற்ம் ஆட் கடத்தலை தடுக்க நடவடிக்கை உள்ளிட்ட துறைகளில் பிரதமர் மோடி மற்றும் ஷேக் ஹசீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

latest tamil news

இரு நாட்டு பிரதமர்களும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது மோடி கூறியதாவது:இந்தியா வங்கதேசம் உறவு வரும் காலங்களில் புதிய உயரத்தை எட்டும். வங்கதேசம், இந்தியாவின் மிகப்பெரிய வளர்ச்சி கூட்டாளியாகவும், இந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாகவும் உள்ளது. இருநாட்டு மக்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியா வங்கதேசம் இடையிலான வர்த்தகம் அதிகரிக்கிறது. ஐடி, விண்வெளி மற்றும் அணுசக்தி துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். மின்சாரம் பகிர்ந்து கொள்வது குறித்து இரு நாடுகளும் ஆலோசித்து வருகின்றன. வெள்ளம் குறித்த தகவல் உரிய நேரத்தில் வங்கதேசத்திற்கு அளிக்கப்படுகிறது.
பயங்கரவாதம் குறித்து விவாதித்துள்ளோம். இந்தியா வங்கதேசம் இடையே 54 நதிகள் பாய்கிறது. மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக உள்ளது. குஷியாரா நதிநீர் பகிர்வு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. இரு தரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து வங்கதேச பிரதமருடன் விவாதித்தேன்.
கோவிட் பெருந்தொற்று, சர்வதேச நிகழ்வுகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். ஆசியா முழுவதும், வங்கதேசத்திலிருந்து ஏற்றுமதி செய்வதற்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. இந்த முன்னேற்றத்தை மேலும் விரைவுபடுத்த, இருதரப்பு பொருளாதார விரிவான கூட்டாண்மை ஒப்பந்தம் குறித்த விவாதங்களை விரைவில் தொடங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

latest tamil news

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதாவது: இந்தியாவின் 75வது சுதந்திர தின நிறைவு விழா கொண்டாட்டங்களை வெற்றிகரமாக நடத்திய இந்திய அரசுக்கும், இந்திய நண்பர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் மோடியுடன் ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்தி உள்ளேன். இதன் பலன்கள் இரு தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும். நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சந்திப்பு நடந்தது.
நமது இரு தரப்பு உறவுகளுக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்து வரும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையை நான் பாராட்டுகிறேன். வங்கதேசத்தின் மிக முக்கியமான மற்றும் நெருங்கிய அண்டை நாடு இந்தியா. இந்தியா – வங்கதேச இரு தரப்பு உறவுகள் அண்டை நாடுகளின் ராஜதந்திரத்திற்கு முன்மாதிரியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.