வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

மத்திய மாகாணத்தில் தவுலுகலயில் யாலேகொட என்ற இடத்தில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (5) இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கடும் மழையே இதற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலத்த காயங்களுக்கு உள்ளான இவர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

யாலேகொடயை சேர்ந்த 39 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக தவுலுகல பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.