மலையக ரயில் பாதையினூடாக வார இறுதியில் சேவையில் ஆடுபடும் “ELLA ODYSSEY” ரயில், எதிர்வரும் 8 ஆம் திகதி முதல், தற்போதைய ரயில் சேவைக்கு மேலதிகமாக இன்னும் இரண்டு ரயில் சேவைகளை மேற்கொள்ள உள்ளதாக ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் டி. எஸ். பொல்வத்தகே அறிவித்துள்ளார்.
உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கைக்கு அமைய ஒவ்வொரு வியாழன் தோறும் கொழும்பில் இருந்து பதுளை வரையிலும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பதுளையிலிருந்து கொழும்பு வரையிலும் இந்த ரயில் சேவைகள் இடம்பெறும்.
இதற்கான ஆசன முன்பதிவுகள் 02.09.2022 பிற்பகல் 03.00 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ரயில் புறப்படும் திகதியிலிருந்து 14 நாட்களுக்குள் ஆசனங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.