காதல் அழிவதில்லை படத்தில் நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து நடித்தவர் சார்மி கவுர். அதன் பிறகு தெடர்ச்சியாக பல தெலுங்கு படங்களில் நடித்தார். இவர் தற்போது சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருக்கப்போவதாக அறிவித்துள்ளார். நடிகை சார்மி, கரண் ஜோஹர், பூரி ஜெகன்னாத் உள்ளிட்ட பலர் இணைந்து அதிக பொருட்செலவில் தயாரித்து பூரி ஜெகன்னாத் இயக்கி வெளியான படம் லைகர். விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, மைக் டைசன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வந்த இப்படம் பல விமர்சனங்களைச் சந்தித்தது மட்டுமின்றி பாக்ஸ் ஆபீஸிலும் படுத்தோல்வியை சந்தித்தது.
Chill guys!
Just taking a break
( from social media )@PuriConnects will bounce back
Bigger and Better…
until then,
Live and let Live ❤️— Charmme Kaur (@Charmmeofficial) September 4, 2022
இதனால் லைகர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை சார்மி படத்தின் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சமூக வலைதளங்களில் இருந்து சில காலம் விலகி இருக்கப்போவதாக சார்மி தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ”கொஞ்சம் அமைதியாகுங்கள் இளைஞர்களே!, சமூக வலைத்தளத்தில் இருந்து விலகி இருக்க போகிறேன். எங்கள் பட நிறுவனத்தை சிறப்பாக தயாராக்கிக்கொண்டு விரைவில் மீண்டும் திரும்பி வருவோம்” என அவர் தெரிவித்துள்ளார். லைகர் படத்திற்கு பூரி ஜெகன்னாத்தை டைரக்டராக வைத்துக்கொண்டு சார்மிதான் முழு படத்தையும் இயக்கி இருக்கிறார் என்றும், அதனால்தான் படம் நன்றாக இல்லை என்றும் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அவரை சாடி வருவதால் தான் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.