பெட்ரோல்- டீசல் விலை
சென்னையில் 107ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63, ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பாத யாத்திரை – தமிழகம் வருகிறார் ராகுல்
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரையை ராகுல் காந்தி நாளை (செப்.7) தொடங்குகிறார். இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணியளவில் சென்னை வருகிறார். நாளை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆசியக்கோப்பை – இந்தியா Vs இலங்கை
ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.
செப்.10இல் ‘பென்னி குயிக்’ சிலை திறப்பு
தமிழக அரசு சார்பில் லண்டனில் கட்டப்பட்டுள்ள பென்னி குயிக் சிலை வரும் 10ஆம் தேதி திறந்து வைக்கப்படுகிறது. இவ்விழாவில் பங்கேற்க அமைச்சர் ஐ.பெரியசாமி லண்டன் புறப்பட்டு சென்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. மத்திய கல்வி அமைச்சரிடம் எழுத்துப்பூர்வமான எதிர்ப்பை தமிழ்நாடு அரசு பதிவு செய்துள்ளது. விரைவில் மாநில கல்விக்கொள்கை வெளியிடப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவிப்பு கடந்த 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரெய்னா ஓய்வு பெற்றார்
மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் சிகிச்சை அளித்த காரைக்கால் அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் ஆய்வு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஆய்வு
கரூர்: புலியூர் பேரூராட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கலாராணி தர்ணா. கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டதால் தர்ணா போராட்டம்
வேளாண் துறை சார்பில் புதிய கட்டடங்களை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார். ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள், ஆய்வக கூடங்கள் உள்ளிட்டவை திறப்பு தாமிரபரணி நதிநீர் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை எதிரொலி. ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியில் வெள்ளநீர் வடியாததால் ஊழியர்கள் அவதி. வெளிவட்ட சாலையில் ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளநீர்
பல மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம், மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை – நீர்வளத்துறை
சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக டீசல் தட்டுப்பாடு. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்க அரசாணை வெளியீடு
சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைப்பு
சமூக நலத்துறை அமைச்சரை தலைவராக கொண்டு நல வாரியம்
தொடர் மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு. ஏற்காடு – சேலம் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்.
பாதையை சீரமைக்க ஒரு வாரம் வரை ஆகலாம் என தகவல். ஜேசிபி, பொக்லைன் இயந்திரம் மூலம் பாறைகளை அகற்றும் பணி தீவிரம்
போக்குவரத்துக்கழக வருவாயை அதிகரிக்க உத்தரவு, வருவாயை அதிகரித்து, நிதிச்சுமையை குறைக்க போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் – போக்குவரத்து கழகம்
பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இலக்கு நிர்ணயித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவு
முழுமையான அளவு பயணிகளை ஏற்றிச் சென்று வருவாயை அதிகரிக்கவும் அறிவுறுத்தல்