அடுத்த இலங்கையாக பாகிஸ்தான் மாறலாமோ? என நிபுணர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர். எனினும் எப்படியேனும் மீண்டு விட மாட்டோமா? என பல வகையிலும் துரிதமாக செயல்பட்டு வரும் பாகிஸ்தானுக்கு உதவ சமீபத்தில் தான் பல நாடுகளும் முன் வந்தன.
அப்பாடா ஏதோ கொஞ்ச தூரத்தில் வெளிச்சம் தெரிகிறேதே என எட்டி பார்க்க ஆரம்பித்த பாகிஸ்தானுக்கு, மீண்டும் வெள்ளம் மூலம் பெரிய தடுப்பு போடப்பட்டுள்ளது. இதிலிருந்து எப்படி மீண்டு வருமோ என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவுக்கு கடந்த சில வாரங்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்த மழை வெள்ளத்தால் 1300 பேருக்குக்கும் மேல் பலியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
டாடா முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.. ஓரே நாளில் 7 சதவீதம் சரிவு..!
கடுமையான வெள்ளம்
தற்போது தான் துளிர்விடத் தொடங்கிய பாகிஸ்தானை அப்படியே மீண்டும் முடக்கி போடும் விதமாக கடும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தேர்வுகளை எழுத முடியாமல் தவிக்கும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் ஊழியர்கள், சரியான உணவுக்கு வழியின்றி தவிக்கும் குழந்தைகள், மக்கள் என பலரையும் இந்த வெள்ளம் வாட்டி வதைத்து வருகின்றது.
பயிர்கள் அழிந்து நாசம்
அது மட்டும் தற்போதைய பருவ பயிர்கள் என பெரும்பாலும் ஏற்கனவே அழிந்துவிட்டன. இதனால் தானியங்கள் மற்றும் உணவு பொருட்களும் பற்றாக்குறை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. பல ஆயிரம் மக்கள் தங்களது வீடு, உடைமைகளை இழந்து நிற்கும் நிலையில், வெள்ளம் வடிய இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. இதனால் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் பயிர்களும் அழுகி இழப்பு ஏற்படலாம் என பாகிஸ்தான் மக்கள் கதறுவதை செய்திகள் மூலம் அறிய முடிகிறது.
மோசமான தாக்கம்
குறிப்பாக விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தும் குடும்பங்களில் இது மிக பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பாகிஸ்தானில் பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 27.3% என்ற அளவுக்கு மிக மோசமான நிலையில் இருந்தது. பாகிஸ்தான் ரூபாய் மோசமான சரிவினைக் கண்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை மிக மோசமான உச்சத்தினை எட்டியிருந்தன.
ஜிடிபி சரிவு
இது பாகிஸ்தான் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாமென அஞ்சப்படுகிறது. ஏனெனில் பாகிஸ்தானின் ஜிடிபியின் 22.7% பங்கு வகிக்கும் விவசாயம் பெரியளவில் சரிவினைக் காணலாம். ஆக இதுவே ஜிடிபியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும். ஏற்கனவே அன்னிய செலவாணி கையிருப்பு சரிவினைக் எதிர்கொண்டுள்ள பாகிஸ்தானுக்கு, இது மேற்கொண்டு பின்னடைவாக இருக்கும்.
அன்னிய செலவாணி சரியலாம்
பாகிஸ்தானின் முக்கிய பருத்தி உற்பத்தி செய்யும் பகுதியான சிந்துவில் கிட்டதட்ட 80% பயிர்கள் நாசமாகி விட்டன. இது மொத்த பாகிஸ்தான் பருத்தி உற்பத்தியில் 30% ஆகும். பாகிஸ்தானின் அன்னிய செலவாணியினில் பருத்தி முக்கிய ஆதாரமாக உள்ள நிலையில், இது மேற்கொண்டு பின்னுக்கு தள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Pakistan’s economy may suffer further setback due to heavy floods
Pakistan’s economy may suffer further setback due to heavy floods/அடி மேல் அடி வாங்கும் பாகிஸ்தான்.. இது போறாத காலம்.. என்ன செய்ய போகிறது?